Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2014

கொள்ளுமேட்டில் இந்தியன் வங்கியின் ATM சேவை?

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள கொள்ளுமேடு கிராமம் அதை சுற்றியுள்ள இராயனல்லூர், அகரம்,மானியம் ஆடூர், நத்தமலை மற்றும் கந்தகுமாரன் போன்ற ஊர்களின் வர்த்தக மையமாக இருந்துவருகின்றது.

 பல ஆண்டுகாலமாக வியாபாரம் மற்றும் வங்கி பணபரிமாற்றங்களுக்கு கொள்ளுமேடு தலைநகரமாகவே விளங்கிவருகின்றது.குறிப்பாக கொள்ளுமேட்டில் மையமாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சிறப்பான சேவையை செய்துவருகின்றது,இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய சேவையில் மக்களின் நன்மதிப்பை பெறாமலே இருந்து வருகின்றது.

மக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை எடுப்பதற்கு அழைகளைக்கபட்டனர் பணம் பற்றாக்குறை என்று பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருந்த இந்தியன் வங்கி,தற்போது கொள்ளுமேடு சுற்றுவட்டார மக்களின் நன்மதிப்பை பெரும் பொருட்டு ATM சேவையை தொடங்க
உள்ளதாக தெரிகின்றது .

இந்தியன் வங்கியின் இந்த சேவையை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் அதேவேளையில் ATM சேவையை சரியான முறையில் கையாண்டு குளறுபடிகள் இல்லாமல் கொள்ளுமேடு சுற்றுவட்டார மக்களின் நன்மதிப்பை பெற வாழ்த்துகின்றது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...