Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2010

ஹிஜ்ரி 1432 புத்தாண்டு.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மறைந்து கலீபாக்கள் ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்களுக்கென ஒரு ஆண்டை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஸஹாபாக்களை ஒன்று கூட்டி கலந்தாலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு ஸஹாபாக்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். இறுதியில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இறைவனின் உத்திரவிற்கிணங்க தான் பிறந்த மக்காமா நகரை துறந்து மதினமா நகரம் சென்ற நிகழ்வு ( ஹிஜ்ரத் ) நடந்த வருடத்தை இஸ்லாமிய முதல் ஆண்டாக கணக்கில் எடுக்க வேண்டும் என்ற யோசனை சிறந்ததாக பட்டது. அதன்படி கணக்கில் எடுத்து இஸ்லாமிய ஆண்டு ஹிஜ்ரி துவக்கப்பட்டது. இஸ்லாமிய மாதம் பிறையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு மாதத்துடைய மொத்த நாட்கள் 29 அல்லது 30.

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள்:
முஹர்ரம், ஸபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமலான், ஷவ்வால், துல்-கயிதா, துல்-ஹஜ்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் எந்த நோக்கத்திற்காக மதீனாவை நோக்கிச்சென்றார்களோ அந்த இலட்சியத்தையும் நோக்கத்தையும் முஸ்லிம் சமூகம் உணராதது வேதனைக்குரிய ஒன்று.
அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் அவனது தூதர் முஹம்மது(ஸல்)அவர்களின் சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டு என்ற உன்னத ஏகத்துவ கொள்கையின்பால் நம் அனைவரையம் ஒன்று சேர்க்க ஏக இறைவனிடம் இந்த புத்தாண்டில் வேண்டுவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...