Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 03, 2010

தேச பாதுகாப்பு பணியில் ஒரு “ராணுவ கிராமம்”

தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் பஞ்சம்பட்டி உள்ளது. இக்கிராம மக்கள் தொகை 6,530ஆகும். (2001 கணக்கெடுக்கின்படி)இக்கிராமத்தில் வீட்டிற்கு குறைந்தது ஒருவர் ராணுவத்தில் உள்ளனர். 2ம் உலக போரில் இக்கிராமத்தை சேர்ந்த 67 பேர் பங்கேற்றுள்ளனர். நாட்டிற்கு சேவை செய்வது தங்களது லட்சியங்களில் ஒன்று என்கிறார் ஊராட்சி தலைவர் கருப்பையா(இவரும் முன்னாள் ராணுவ அதிகாரி).
இவர் கூறுகையில்,”இந்த ஊரை சேர்ந்த சேவியர் என்பவர் 2ம் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்தார். அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றினார். இவர் விடுமுறைக்கு வந்தபோது கிராம மக்களிடம் நாட்டுபற்று பற்றி கூறுவார். சிலரை ராணுவத்தில் சேர்க்க அழைத்தும் செல்வார். சுமார் நூறு பேர் இவரால் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் ராணுவவீரர்கள் விடுமுறைக்கு வரும் போது அவர்களை பார்த்து பிற இளைஞர்களும் ராணுவத்தில் சேர்ந்தனர்.

தற்போது இக்கிராமத்தில் 300 பேர் முன்னாள் ராணுவ வீரராகவும், 300க்கும் அதிகமானோர் ராணுவத்திலும் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர் சங்கம் எங்கள் கிராமத்தில் உள்ளது. அவர்களது ஆலோசனைபடி நான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஒளிவுமறைவற்ற நிர்வாகம் இக்கிராமத்தில் நடக்கிறது. நாட்டிற்கு சேவை செய்தது போல் கிராம வளர்ச்சிக்கும் பாடுபடுகிறேன்,’என்றார்
Source:DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...