Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 26, 2010

மொபைல் போன்களால் உருவாகும் ‘நோமொபோபியா’!

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர்.

இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றையதலைமுறையினர் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.
கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு வருவதுதான் இந்த நோமொபோபியா. நோ மொபைல் போபியா என்பதன் சுருக்கம்தான் நோமொபோபியா. மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இது வரும். மொபைல் போன்களை பயன்படுத்துவோரில் 53 சதவீதம் பேருக்கு இந்தமன வியாதி இருக்கிறதாம். இந்நிலையில் வட மாநிலங்களில் முசாபர் நகர் மாவட்டம், லங்க் கிராமத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் கூடி, கிராமத்திலுள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், “மொபைல் போன் இளைஞர்களிடத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமாகாத பெண்கள் காதல் திருமணம் செளிணிவதை தடுக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
Thanks:samuthayaotrumai

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...