Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 12, 2010

புர்ஜ் காலிபா கட்டடத்தில் இந்தியர்கள் ஆதிக்கம்


துபாய் : உலகின் உயரமான புர்ஜ் காலிபா கட்டடத்தில், இடம் வாங்கியவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். உலகிலேயே உயரமான கட்டடம் என்ற பெருமையை துபாயில் கட்டப்பட்டுள்ள புர்ஜ் காலிபா கட்டடம் பெற்றுள்ளது. இக்கட்டடம், இந்த ஆண்டு துவக்கத்தில் திறப்பு
விழா கண்டது. அதில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், அக்கட்டடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை வாங்கியவர்கள் பட்டியலில், இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக ரெடின்.காம் என்ற இணையதளத்தில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்த இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை:புர்ஜ் காலிபா கட்டடத்தில் கடந்த ஏழு மாதத்தில் 36 கோடி மதிப்புடைய இடங்களை இந்தியர்கள் வாங்கியுள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி, அக்கட்டடத்தின் 100வது மாடி முழுவதையும் வாங்கியுள்ளார்.தானுப் குழும தலைவர் ரிஸ்வான் சாஜன் சமீபத்தில் அதில் இடம் வாங்கியுள்ளார். இதேபோன்று தொழிலதிபரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா, புர்ஜ் காலிபா கட்டடத்தில் வீடு வாங்கியுள்ளார்.

புர்ஜ் காலிபா கட்டடத்தில் இடம் வாங்கியவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரண்டாம் இடம் வகிக்கின்றனர். இதை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, ஓமன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம் வாங்கியுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...