Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2010

அப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த கம்பியூட்டர்களில் ஒன்று 213,000 டொலருக்கு விற்பனை!



அப்பிள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர்களான ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியக் ஆகியோரால் தங்களது ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது கம்பியூட்டர்களுள் ஒன்று 213, 600 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.அப்பிள் 1 கம்பியூட்டர்கள் 1976 இல் உருவாக்கப்பட்டவை.

செவ்வாய்க்கிழமை லண்டனில் இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த கம்பியூட்டர் விற்கப்பட்டதாக அப்பிள் நிறுவன இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மார்கோ பொக்லியோன் என்பவர் இதை வாங்கியுள்ளார். அப்பிள் - 1 என்ற இந்தக் கம்பியூட்டரின் அப்போதைய விற்பனை விலை 666.66 டொலர்கள் மட்டுமே. இந்தக் கம்பியூட்டருக்கு ஒரு தொழில்நுட்ப வரலாறு உள்ளது.
யார் வேண்டுமானாலும் இலகுவாகப் பாவிக்கலாம் என்ற ரீதியில் தயாரிக்கப்பட்ட முதலாவது இயந்திரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வகைக் கம்பியூட்டர்களானது மக்கள் மத்தியில் கம்பியூட்டர்களைப் பிரபலமாக்கி கம்பியூட்டர் பாவனையில் புரட்சியை ஏற்படுத்தியவையாகும்.

அப்பிள் 1 கம்பியூட்டர்கள் 1976 இல் உருவாக்கப்பட்டவை. இந்த ஏல விற்பனையின் போது இதை உருவாக்கியவர்களுள் ஒருவரான வொஸ்னியக்கும் இங்கு சமுகமளித்திருந்தமை ஒரு விஷேட அம்சமாகும்.

ஒரு ஏல விற்பனையில் தனிநபர் கம்பியூட்டர் ஒன்றுக்குக் கிடைத்த ஆகக் கூடுதலான விலை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
source:CNN

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...