Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2010

பாப்ரி மஸ்ஜித்:சன்னி வக்ஃப்போர்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

பாப்ரி மஸ்ஜித் உரிமையியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக சன்னி வக்ஃப்போர்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

ஆதாரங்களுக்கு பதிலாக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி சுன்னி வக்ஃப்போர்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

2.77 ஏக்கர் மொத்த நிலத்தை சுன்னி வக்ஃப்போர்டுக்கும், நிர்மோஹி அகாராவுக்கும், ஹிந்து மகாசபைக்கும் பங்கீடுச்செய்து அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவியலாது என மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் கட்டிடம் நிலைப்பெற்றிருந்த நிலம் ராமனின் பிறந்த இடம் என்ற வாதத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் உயர்நீதிமன்றம் தவறிழைத்த சூழலில்தான் அத்தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்புகிறோம் என மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஜம்மியத்துல் உலமா சார்பாக ஏற்கனவே மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. ஆதாரங்களுக்கு பதிலாக நம்பிக்கையைத்தான் நீதிமன்றம் பரிசீலித்தது என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய வாதத்தையும் கேட்டபிறகே இம்மனுவில் தீர்ப்பு அளிக்கவேண்டுமென கோரி அகில பாரதீய ஹிந்துமகாசபை தடை மனுவை தாக்கல் செய்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் சட்டவிரோதமாக தகர்க்கப்பட்டது. ஆனால், அதன் சிதிலங்கள், தற்பொழுதும் அங்கே உள்ளன. மஸ்ஜிதின் அஸ்திவாரம் தற்பொழுதும் பாதுகாப்பாகத்தான் உள்ளது. ஆகையால், பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியதற்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்கு பதிலாக நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியை நிறுவியிருக்க வேண்டும். நிலத்தின் உரிமையை முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும், நிர்மோஹி அகாராவுக்கும் வழங்கவேண்டும் என எவரும் கோரவில்லை.

மூன்று முக்கிய கட்சிதாரர்களும் நிலத்தின் பரிபூரண உரிமைக்காகத்தான் வாதிட்டார்கள் என ஜம்மியத்துல் உலமா தாக்கல் செய்துள்ள அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி எம்.எல்.ஏ சுஹைப் இக்பால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தவறான புரிந்துணர்வின் அடிப்படையிலானது எனக்கூறி நீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது.

செய்தி:தேஜஸ்& பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...