Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 16, 2010

கடலூர் மாவட்டத்தில் அடுப்பு உண்டு; எண்ணெய் இல்லை

தொடர்மழை ஓய்ந்தாலும், தொடரும் மேகமூட்டத்தாலும், குளிர்ந்த காற்று வீசுவதாலும், கிராமப்புற மக்கள் அடுப்பு எரிக்க முடியாமல், அவதிப்படுகின்றனர். இதனால் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இத்துடன், கள்ளமார்க்கெட்டில் லிட்டர் 30 வரை மண்ணெண்ணெய் விற்பனையாகிறது. வடகிழக்குப் பருவமழை கடந்த 10 தினங்களாகக் கொட்டித் தீர்த்ததில், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, கான்கிரீட் மற்றும் ஓடுவேய்ந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.

கடந்தவாரம் ஒருவழியாக மழை பெய்வது சற்று ஓய்ந்ததையடுத்து கிராமமக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.ஆனாலும் அன்றாடம் சமையல் செய்ய, அடுப்பெரிக்க விறகு இன்றி அவதிப்படுகின்றனர். மழையில் விறகுகள் நனைந்துவிட்டதால் அவற்றை உலரவைக்க வெயிலில் எடுத்து போட்ட போதிலும், மேகமூட்டமாக இருந்ததால் விறகுகள் காயவில்லை. இதனால் சமைக்க முடியாமல் கிராமமக்கள் அவதிப்படுகின்றனர்.

ஒரு சில கிராமங்களில் அரசு வழங்கிய இலவச கேஸ் அடுப்பை கிராம மக்கள் பயன்படுத்திய போதிலும், இலவச அடுப்புக்கு சிலிண்டர் வழங்குவதற்கு கேஸ் முகவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.மேலும் பெரும்பாலான மக்கள், இலவச கேஸ் அடுப்பை விற்றுவிட்டனர். இந்நிலையில் அண்மையில் பெய்த மழை, பெரும்பாலான கிராமமக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது.

சமைக்க முடியாமல் அவதியுறும் கிராமமக்கள் தற்போது மண்ணெண்ணெய் ஸ்டவ்வை வாங்கிச் செல்கின்றனர்.அவ்வாறு வாங்கினால் அவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் |30-க்கு வாங்கித்தான் சமையல் செய்வதாகவும், எனவே அரசு எங்களுக்கு தற்போது நிவாரணமாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என வடலூரை அடுத்த சேராக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தெரிவித்தார்.

அரசு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்காவிட்டாலும், அவசரத் தேவையான மண்ணெண்ணெய்யை உடனடியாக ரேஷன் கடைகளில் கூடுதலாக வழங்கினால் கிராமமக்களின் தற்போதயை துயர்துடைக்க உதவும் என்பதை அரசு பரிசீலிக்குமா?
thanks:கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...