Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -3
1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே!!
வெற்றிலை கொடிக்காலில் ஊடுப்பயிராக வாழை,கத்தரிக்காய் ,வெண்டை,மிளகாய் கிழங்கு வகைகள் கீரை வகைகளும் சேர்த்து பயிரிடப்படும்.
வீட்டிற்கு வேண்டிய காய்கறிகள் மட்டுமின்றி உணவு சமைக்க தேவையான விரகு வரை அனைத்தும் கிடைத்துவிடும்!
இங்கே வேலை வாய்ப்புகள் நிறைந்து கிடந்தன பல ஊர் மக்கள் வேலை தேடி இந்த ஊரில் குவிந்த வன்னம் இருப்பார்கள்!!
பயிர் கிடங்கு வெட்ட நெல்லிகுப்பதிலிருந்து வளைந்த மம்மட்டியுடன் கயிர் சேர்த்து கையில் எடுத்து வருவார்கள் அது கண் கொள்ளாகாட்சியாக இருக்கும் 
ஆவணி மாதம் முழுவதும் வேலை இருக்கும்!! சித்திரை மாதம் வந்து விட்டால் பயிர் விட்டம், பக்கவிட்டம் கட்ட, சவுக்கு மரம் அதன் கிளை சிம்பு தெற்கிலிருந்து ஏற்றிவரும் மாட்டு வண்டிகளின் அனிவகுப்பு காலை 7 மணிக்கு துவங்கும.
தைமாதம் வந்துவிட்டால் எருவு உரம் ஏற்றிய மாட்டு வன்டிகள் வடக்கில்
இருந்து காலை 6 மணிக்கு வரிசையாக வருவதும் தேவை உள்ளவர்கள் வண்டியை
வழிமரித்து விளைபேசி வாங்குவது என சத்தமின்றி வியாபாரம் நடக்கும்!!
வைகாசி மாதத்தில் பயிர் வேலியை மறைத்து கட்ட "சம்பு" என்ற நானல்
மேற்கிலிருந்து ஓடம் ஏரி வீராணம் மேற்பரப்பில் சுமையோடு மிதந்துவரும்
அழகோ அழகு!!
வெற்றிலை கொடி கட்டுவதற்கும் வெற்றிலை பரிப்பதற்கும் வருடம் 365 நாட்களும் வேலை கிடைக்கும் லப்பைகுடிகாடு,திருவண்ணாமலை மருதூர், அகரம், கிள்ளை,குஞ்சரம் என பல ஊர் மக்கள் இந்த கிராமத்தோடு தொடர்ப்பில் இருந்தார்கள் !!
நெல் அறுவடை காலங்களில் வீராணம் ஏரிக்கு மேற்கே இருந்து சித்தமல்லி, பாலையங்கோட்டை, வட்டத்தூர், குமாரபாலையம், தெற்கே எய்யலூர், மிராலூர்,
கண்டமங்களம் உள்பட பல ஊர் மக்கள் வேலைத்தேடி வருவார்கள்!!
வெளி ஊர் தொழிலாளிகளின் புகழிடமாகவும் ஓய்விடமாகவும் இருந்தது ஏரிக்கரைக்கும் கடைத்தெருவுக்கும் மையத்தில் அமைந்து இருந்த "சத்திரம் சாவடி"ஏறக்குறைய 50 க்கு 50 தில் 2500 சதுரஅடியில் பரந்து விரிந்த ஓட்டு கட்டிடம் அது!
சத்திரத்தின் அருகே நாச்சான் குளம் சுமார் 2 ஏக்கர் இருக்கலாம்,குளத்தை சுற்றி பூவரசன், காட்டு கருவை, நொன்னா போன்ற மரங்கள் நிறைந்து இருக்கும்,குளத்தில் தெளிந்த ஊற்று நீர் பளிச்சென்று இருக்கும்!!
சாதாரனமாக சாவடி பக்கம் மக்கள் எந்நேரமும் சூழ்ந்து நிர்ப்பார்கள் குளிர்ந்த காற்றும்,சதா விளையாடும் ஊர் வாலிபர்கலையும் எப்போதும் பார்க்கமுடியும்.
போக்குவரத்து வசதியில்லா அக்காலத்தில் ஏரிக்கரை ரோட்டில் நடைப்பபயனமாக செல்பவர்கள் இரவு நேரங்களில் பயண கலைப்பை போக்க சத்திரத்தில் தங்கி செல்வதும் உண்டு.தொழிலாளர்கள் இரவு உணவு செய்து சாப்பிட்டு, மீதம் உள்ள உணவை மரக்கிளைகளில் உரிகட்டி தொங்கவிட்டு வேலைக்கு செல்வார்கள் அங்கே மரக்கிளை முழுவதும் உரிகள் தொங்கும் காட்சியைபார்க்கலாம்!!
இராயநல்லூர் நாட்டார் குடும்பத்தார் அக்கினி நச்சத்திரம் 15 நாட்களும் நீர் மோர் ஊற்றுவார்கள்! பள்ளிக்கூட இடைவேளையில் அதை குடிக்காத மாணவர்கள் இல்லை எனலாம், தாளித்த மோர் வெயிலுக்கு இதமாக இருக்கும்.அந்த குடும்பத்தார்களை இந்நேரத்தில் வாழ்த்துகிறேன்!!
நவீன தொழில்நுட்பமில்லா அன்றய விளையாட்டிலும் மண் மனம் வீசும் நொண்டி,கபடி,உப்புகள், சூப்பூடி ஆபியம்,பே பந்து மறைந்து விளையாடுவது பம்பரம் விட்டு விளையாடுவது கோட்டிபுல்,காற்றாடி விடுவது, முட்டித்தேய கோழிக்குண்டு விளையாட்டு,மாலை நேரத்தில் சிலம்பாட்டாம் நடப்பதும் அன்றாட நிகழ்வு!
இன்றோ அனைத்தும் தலைக்கீளாய்!!
ஊரனிகளில் நீர் இன்றி, விவசாயம் ஏட்டில் எழுதும் செய்தியாய் மாற
உள்ளூர் மக்கள் வருமானம் வேண்டி
உலகை வலம் வர துவங்கி விட்டார்கள்!
மணம் மாறியது
மண் மனமும் மாறிப்போனது!
அது ஒரு கனாக்காலம்தான்...!
-நன்றி M.I அன்வர்தீன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...