Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 30, 2010

இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வம் : மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

சந்திராயன் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி ஆராய்ச்சி செய்ய இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை பேசினார்.இந்திய வேதிப் பொறியாளர் 63வது ஆண்டு மூன்று நாட்கள் கருத்தரங்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.

கருத்தரங்கில் பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, "சந்திரனில் இந்தியா' என்ற தலைப்பில் பேசியது:

சந்திரனைப் பற்றி 1960ம் ஆண்டில் தான், முதன் முதலாக ஆராயத் தொடங்கினர். 1980ம் ஆண்டில் தான் ஒவ்வொரு நாடாக ஆராய்ந்தது. எல்லா நாடுகளும் சந்திரனில் ஒரு பகுதியை தான் பார்த்துள்ளனர். ஆனால் சந்திராயன்-1 செயற்கை கோள் மூலம் சந்திரனின் அனைத்து பகுதியையும் பார்த்தது இந்தியா மட்டும் தான்.அங்கு என்னென்ன கனிம பொருட்கள் உள்ளது. என, தெளிவாக ஆய்வு மேற்கொண்டது. மூன்று மைக்ரான் அளவில் கண்ணால் பார்க்க முடியாத வேதிப் பொருட்களும், தண்ணீர் இருப்பதற்கான ஆதாரமும் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைத்தது. நாங்கள் பட்ட கஷ்டங்கள் சவாலோடு கொண்ட பலன் சந்திராயன் -1 வெற்றி மூலம் கிடைத்தது.இந்த வெற்றி உலக நாடுகள் சந்திரனை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள, ஒரு அடித்தளமாக அமைந்தது. இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை அதிகரித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி செய்ய 250 விண்ணப்பங்கள் கூட வருவது கடினம். ஆனால் சந்திராயன் வெற்றிக்கு பிறகு ஒரு லட்சம் பேருக்கு மேல் ஆர்வம் காட்டுகின்றனர். சந்திராயன்-1 வெற்றி சந்திராயன் -2ன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...