Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 01, 2010

விக்கிலீக்ஸ்: குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் - உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சல்

வாஷிங்டன்,டிச.1:குவாண்டனாமோ சிறைக் கொட்டடியை இழுத்து மூடுவதாக அறிவித்த அமெரிக்கா, அதேவேளையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளை என்னச் செய்வது? என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளதாகவும், இவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு உலகின் பல்வேறு நாடுகளை கெஞ்சிக் கேட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.

குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஏற்றுக்கொண்டால் பெருந்தொகை தருவதாக ஆசைவார்த்தையூட்டியும், அதிபர் ஒபாமாவுடன் நேரடி சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்வதாகக் கூறியும் அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் பேரம் பேசியுள்ளது.

குவாண்டனாமோ சிறைக் கைதிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு சவூதி ஆட்சியாளர் ஒரு விசித்திரமான ஆலோசனையை தெரிவித்துள்ளார். அதாவது, சிறைக்கைதிகளை யெமன் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அவர்களின் உடம்பில் குதிரை மற்றும் ஃபால்கன் பறவைகளுக்கு பொருத்துவதுபோல் ஒரு சிப்பை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்பதே அந்த ஆலோசனை.

இந்த ஆலோசனை வெள்ளைமாளிகை செயலாளர் ஜான் ஓ.ப்ரன்னன் முன்னிலையில் வந்தபொழுது, ப்ரன்னன் அளித்த பதில் என்னவெனில், குதிரைகளுக்கு நல்லதொரு வழக்கறிஞர் இல்லை என்பதாகும்.

குவாண்டானாமோ சிறையை பூட்டுவதன் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளை குறைப்பதுத் தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. சிறைக்கைதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களை நிரந்தரமாக கண்காணிக்கும் நாடுகளைக் குறித்துதான் அமெரிக்கா தேடுதல் வேட்டையை நடத்தியது.

சிறைக் கைதிகளை ஏற்றுக்கொள்ள ஒபாமாவுடன் 20 நிமிட சந்திப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை ஸ்லாவானியா நாடு முன்வைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. ஐ.எம்.எஃபின் உதவி கிடைக்க அமெரிக்கா உதவவேண்டும் என மாலத்தீவு கோரிக்கை வைத்துள்ளது. அதேவேளையில் 17 உய்கூர் முஸ்லிம்களை ஏற்றுக்கொண்டால் 30 லட்சம் டாலர் தருவதாக கிரிபாத்திக்கு ஆசை காட்டியுள்ளது அமெரிக்கா.

குவாண்டானாமோவில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களது நாட்டு சிறைக்கைதிகளை ஏற்றுக்கொண்டால் என்ன தருவீர்கள்? என தொடர்ந்து யெமன் நாடு அமெரிக்காவை நச்சரித்துள்ளது.

குவாண்டனாமோ சிறையை இழுத்து மூடப்போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த பொழுது அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அயல்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு குவாண்டனாமோ சிறைக் கைதிகள் எண்ணிக்கையை 240-லிருந்து 174 ஆக குறைக்க மட்டுமே அமெரிக்காவால் முடிந்துள்ளது.

உய்கூர் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வதற்கு இதர நாடுகளை சீனா தடுத்திருந்தது. உய்கூர் முஸ்லிம் கைதிகளுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கையை மேற்கொண்டால் ஆப்கானிற்கு சரக்குகளைக் கொண்டுச்செல்ல கூடுதல் வசதிகளை செய்துதருவதாக சீனா வாக்குறுதியளித்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட கைதிகள் 41 பேரில் 29 பேரை நீதிமன்றம் விசாரணையில்லாமல் விடுதலைச் செய்தது. அவர்கள் தற்பொழுது எங்குள்ளார்கள்? என்பதுக் குறித்து தகவல் இல்லை.

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒபாமாவின் தீவிரவாத எதிர்ப்பு ஆலோசகரான ப்ரன்னனிடம், பெருந்தொகையை தந்தால் குவாண்டனாமோவின் மீதமுள்ள அனைத்துக் கைதிகளையும் ஏற்றுக்கொள்ள தயார் என யெமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அனுமதி அளித்துள்ளார்.

ஆனால், பொதுமக்களின் நிர்பந்தத்திற்கு முன்னால் ஸாலிஹால் அதிககாலம் நிலைத்து நிற்கமுடியாது என யெமன் நாட்டு அமெரிக்க தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. இதனால் அமெரிக்கா குவாண்டனாமோ சிறைக் கைதிகளை யெமனிற்கு அனுப்ப தயங்கியது.

சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான சிகிட்சை வழங்க 110 லட்சம் டாலர் தேவை என ஸாலிஹ் கோரியுள்ளார். ஆனால், அத்தகையதொரு திட்டத்திற்கு நீண்டகாலம் தேவைப்படும் எனக்கூறி ப்ரன்னன் நழுவியுள்ளார். ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஸாலிஹ் எவ்வளவு தொகை கிடைக்கும்? என அமெரிக்காவை கேட்டுள்ளார். முதல்கட்டமாக ஐந்து லட்சம் டாலர் தரலாம் என அமெரிக்கா கூறியதால் பேச்சுவார்த்தை முறிந்தது.

குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஆப்கானில் கொண்டுவிட்டு பின்னர் அவர்களை கொலைச் செய்யவேண்டும் என்பது குவைத் நாட்டின் கொடூர யோசனையாகும்.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...