Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 14, 2010

அணுவாயுதப் போர் தொடுக்க வட கொரியா மிரட்டல்

சோல் அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் நிலவும் ஒத்துழைப்பால் அவ்வட்டாரத்தில் அணுவாயுதப் போர் தொடங்கக் கூடும் என்று வட கொரியா நேற்று எச்சரித்தது.
தென் கொரியத் தீவின்மீது வட கொரியா தாக்குதல் நடத்தி கிட்டத் தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகும் அவ்வட்டாரத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், தென் கொரியா உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தும் கடற்படை பயிற்சியைத் தொடங்கியிருக்கிறது.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை 27 இடங்களில் பயிற்சி நடைபெறவிருக்கிறது. வழக்கமான இந்தப் பயிற்சி, தற்போதைய பதற்றநிலையில் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது.

கடந்த 1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போர் முடிவுக்கு வந்தபிறகு முதல்முறையாக, நவம்பர் 23ம் தேதி குடிமக்கள் வாழும் பகுதியில் வட கொரியா தாக்குதல் நடத்தியது. இதில் தென் கொரியர் 4 கொல்லப்பட்டனர்.
தென் கொரியா தனது நீர் நிலையை நோக்கிச் சுட்டதால் தாக் குதல் நடத்தியதாக வட கொரியா சொல்கிறது. ஆனால், வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாகவே தெற்கு நோக்கி சுட்டதாகவும், வட கொரியாவை நோக்கிச் சுடவில்லை என்றும் தென் கொரியா கூறுகிறது.
வட கொரியாவின் தாக்குத லுக்குப் பிறகு, தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தின. அதோடு, கூடுதல் பயிற்சிகளுக்கும் தென் கொரியா ஏற்பாடு செய்தது.
இதனால் நிலைமை மோசமடை யும் என்று வட கொரியா விடுத்த எச்சரிக்கையைத் தென் கொரியா பொருட்படுத்தவில்லை.
இதற்கிடையே, இவ்வாரம் நடக்கும் பயிற்சியின் முக்கியத் துவத்தை மட்டுப்படுத்தி பேசினார் தென் கொரிய கூட்டுப்படை அதிகாரி ஒருவர்.
இது வழக்கமான பயிற்சி என்றும், சர்ச்சைக்குரிய கொரிய கடல் எல்லைப்பகுதிக்கு அருகில் நடக்காது என்றும் கூறிய பெயர் கூற விரும்பாத அவ்வதிகாரி மேல் விவரங்கள் வெளியிடவில்லை.

ஆனால், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து தென் கொரியா பியோங்யாங்கை நெருக்குவதாக வட கொரியா குற்றம் சாட்டுகிறது.
“இந்த ஒத்துழைப்பு வடக்குக் கும் தெற்குக்கும் இடையிலான பதற்றநிலையை அதிகரிக்கச் செய்து, கொரியத் தீப கற்பத்திற்கு மேலே அணுவாயுதப் போரின் கரு மேகங்களைச் சூழ வைக்கும் சதி யன்றி வேறெதுவுமில்லை,” என்று பியோங்யாங்கின் ரொடொங் சின்முன் பத்திரிகை குறிப்பிட்டது.
செய்தி: தமிழ் முரசு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...