Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -5
கொள்ளுமேட்டில் சங்கங்கள் சாதித்த சமுதாய சாதனைகள் அளப்பெரியது! அல்ஹம்துலில்லாஹ்!!
நம் ஊரில்1970 ஆம் ஆண்டு வரை இரவு நேரங்களில்தான் திருமணங்கள் நடைப்பெறும், ஊர் மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக நடத்துவது வழக்கம்.1971 ஆம் ஆண்டுக்குக்கு பிறகுதான் பகல் நேர திருமண நிகழ்வுகள் வழக்கத்திற்கு வந்தது.
நம் பகுதி விவசாயம் கொடிக்கால் பயிர் நிறைந்த பகுதி என்பதால் காலை முதல் மாலை வரை கடுமையான வேலை சுமையால் ஊரே ஆட்கள் அரவம் இன்றி இருக்கும், நல்ல காரியங்களுக்கு நான்கு பேர் கிடைப்பதே பெரிது இதை கருத்தில் கொண்டு 1977 ஆம் ஆன்டு உருவானதுதான் கொள்ளுமேடு "இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்".
50க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒருங்கினைத்து மாதசந்தா ரூ 1 என்ற வீதம் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் பங்கேற்பது ஏழை எளியவர்கள் காரியங்களில் நின்று நமது மேற்பார்வையில் சிறப்பாக நடத்துவது, சமுதாய அமைப்புகள் நடத்தும் மாநாடு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது, ஊர் பொது நிழ்ச்சிகளை ஒன்றினைப்பது, பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வ பனிகளை முன்னேடுப்பது என தீர்மானித்து துவங்கபட்டதுதான் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம்!!
அதே கால கட்டத்தில் இளைஞர்களை நோக்கி அரபுநாடுகள் வேளை வாய்ப்பு என்ற வலை வீச,அந்த வலையில் சிக்கிய நம் இளைஞர்கள் கனவுகளோடு கப்பல் ஏற
கல கலத்தது மன்றங்கள்.
பிறகு 17+ வயது நிறைந்த இளைஞர்களை ஒன்றினைத்து 1985 ஆம் ஆண்டில் "தப்ஸ்குழு"என பெயர்மாற்றம் பெற்றது அதே திட்டம்தான் ஆனால் இப்போது வரவேற்பு அதிகம் "தப்" அடித்ததால் மக்கள் ரசிக்கதுவங்கினர் வருமானம் பெருக பல சமூக நலதிட்டங்கள் செய்ய சமூகத்தில் நல்ல பெயரும் கிடைத்தது!!
நம் ஊரில் ஏரிக்கரையில் பயனிகள் நிழல்குடை என்பது பகல் கனவாகவே இருந்தது! மழை வெயில் காலங்களில் பஸ் ஏற வரும் பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் பெரியவர்கள் வரை அமர நிழல் குடை வசதி இல்லை. மூன்று கிராமத்து மக்கள் நெடுந்தூரம் நடந்து வந்து பேருந்துக்காக காத்திருப்பர்!!
நிழல்குடை கட்டிதர ஊர் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்து பல வருடம் காத்து இருந்தும் பலனில்லை தப்ஸ்குழு வின் முயற்சியால் ஏரிக்கரை ரோட்டில் முதல் கீற்று கொட்டகை கட்ட சிதம்பரம் PWD அலுவலகத்திடம் அனுமதி பெறப்பட்டது.1987 ஆம் ஆண்டில் பயனியர் நிழல்குடையை அமைத்து ஏறத்தாழ 25 வருடங்கள் பராமரித்து பாதுகாத்து வந்தது தப்ஸ் குழு.
தற்போது ஊராட்சி மன்றம் மற்றும் Mla சார்பாக என 2 நிழல் குடைகள் சங்கத்தின் சாதனைக்கு சான்று பகர்ந்து நிற்கிறது!!
ஏரிக்கரையில் உள்ள பயனியர் நிழல் குடை கிடைக்க காரணமாக இருந்தது நமதூர் இளைஞர்களின் செயல்பாடுகள்தான் என்பதில் மகிழ்வு கொள்வோம்!!
-நன்றி M.I அன்வர்தீன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...