Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 02, 2010

இந்தியா தாக்கினால் சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்தார் சர்தாரி-விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்: இந்தியா எங்களைத் தாக்கினால் நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்திருந்தார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் தொடர்பான ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையின்போதுதான் இந்த எச்சரிக்கையை அமெரிக்காவிடம் தெரிவித்தார் சர்தாரி.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் ஜனவரி 2ம் தேதி தன்னை வந்து சந்தித்த பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஆன்னி பீட்டர்சனுடன் பேசிய சர்தாரி, இந்தியா எங்களை ராணுவ ரீதியாக தாக்கினால், எங்களுக்கு வேறு வழியில்லை, நாங்களும் சரியான பதிலடி கொடுப்போம். எங்களது நாட்டின் கொள்கையை எங்களைத் தவிர வேறு யாரும் செயல்படுத்தவோ, இயக்கவோ திணிக்கவோ முயன்றால் அதை அனுமதிக்க மாட்டோம்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை காஷ்மீரை விட மிகப் அரசியல் பிரச்சினை எதுவுமே இல்லை என்றும் கூறியுள்ளார் சர்தாரி.

பாக்.கில் பதுங்கியிருக்கும் அல் கொய்தா-போட்டுக்கொடுத்த முஷாரப்

இதேபோல அல் கொய்தா அமைப்பின் மிச்சம் மீதித் தலைவர்களும் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிடம் கூறியுள்ளார் முஷாரப் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மலைப் பகுதியில்தான் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் முஷாரப், அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

பின் லேடனும், அவனது உதவியாளருமான அய்மான் அல் ஜவாஹிரியும் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வந்த நிலையில், அமெரிக்க எம்.பிக்கள் குழுவிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

பின்லேடன் உள்ளிட்டோர் குறித்து தாங்கள் முஷாரப்பிடம் கேட்டபோது அவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலைப் பகுதியில், பாகிஸ்தான் பகுதிக்குள்தான் பதுங்கியிருப்பதாக ஒப்புக் கொண்டார் என எம்.பிக்கள் குழு கூறியதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...