Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 16, 2010

பழைய ரேஷன் கார்டு: மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு


தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், வரும் ஆண்டு ஜூன் மாதத்துடன் காலாவதியாவதால், அவற்றை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டுகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி, ஏற்கனவே, 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், கடந்தாண்டு டிசம்பருடன் காலாவதியாகின. இந்நிலையில், மத்திய அரசு, அனைவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் பணியை துவக்க உள்ளதாலும், தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்யும் பணி நடந்ததாலும், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில், உள்தாள்களை ஒட்டி, வரும் 2011, ஜூன் வரை செல்லத்தக்க வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

அதற்குள், குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்து புதிய ரேஷன் கார்டுகளை அச்சடித்து வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.இந்நிலையில், வரும் ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளதாலும், தற்போது தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருவதாலும், ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களின் குடும்ப விவரங்களை சேகரித்து புதிய கார்டு அச்சடிக்கும் பணியில் கவனம் செலுத்துவது இயலாத காரியம் என, அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், வரும் 2011, டிசம்பர் 31ம் தேதி வரை, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் செல்லத்தக்கவை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை ஒட்டவும், தேவையான பதிவேடுகளை அச்சடிக்கவும் அனுமதி அளித்து, உணவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
thanks:கடலூர் மாவட்டம் செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...