Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 28, 2011

குவாண்டனாமோ:சிறைக்கைதிகளை சித்திரவதை- ஒத்துழைத்த அமெரிக்காவும், பிரிட்டனும்

லண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறைக்கைதிகளை சித்திரவதைச்செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவின் சி.ஐ.ஏவும், பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தைக்குறித்து பிரிட்டீஷ் அமைச்சர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இட்டுக்கட்டப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு குவாண்டானாமோ சிறைகளில் அடைக்கப்பட்டிருப்போர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் தெரியும் என அந்த ஆவணங்கள் கூறுகின்றன.விசாரணையில்லாமல் பல வருடங்களாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.சிறைக்கைதிகளை நிர்வாணமாக்கி நாய்களைக்கொண்டு கடிக்க வைத்தல், துணியால் கட்டப்பட்ட முகத்தில் தண்ணீரை பீய்ச்சியடித்து மூச்சு திணறச்செய்தல் போன்ற சித்திரவதைகளை சிறைக்கைதிகள் சந்திக்கின்றனர்.

முன்னர் தாலிபானால் கைதுச்செய்யப்பட்ட பிரிட்டீஷ் குடிமகன் ஜமால் அல் ஹாரிதும் குவாண்டானாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சக கைதியைக்குறித்து ஆதாரங்களை சேகரிப்பதற்காக இன்னொரு பிரிட்டீஷ் குடிமகன் பின்யாம் முஹம்மது கைதுச்செய்யப்பட்டுள்ளார்.
குவாண்டானாமோவில் நடக்கும் சம்பவங்களின் சிறியதொரு பகுதியை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது என சட்ட உதவிகள் வழங்கும் ரிப்ரீவின் இயக்குநர் க்ளிவ் ஸ்டாஃபோல்ட் ஸ்மித் கூறுகிறார்.172 சிறைக்கைதிகள் குவாண்டானாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆம்னஸ்டி இண்டர்நேசனல் முன்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...