Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 18, 2011

செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி16 20ம் தேதி ஏவப்படும்

பெங்களூர்: மூன்று செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட் நாளை மறுதினம் காலை ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விஞ்ஞானிகள், ரிசோர்ஸ்சாட்-2 என்ற தொலையுணர்வு செயற்கைகோளை தயாரித்துள்ளனர். 1,206 கிலோ எடை உள்ள இந்த செயற்கைகோள் இயற்கை வளங்களை படமெடுத்து பூமிக்கு அனுப்பும். இந்த செயற்கைகோளை ஏவுவதற்கான ஏற்பாடுகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.


இதற்காக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட் தயார் செய்யப்பட்டது. அங்குள்ள ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், ரிசோர்ஸ்சாட்-2 தவிர மேலும் இரண்டு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதில் ஒன்று இந்திய- ரஷ்ய கூட்டு தயாரிப்பான யூத்சாட் என்ற 92 கிலோ செயற்கைகோள். இது வளிமண்டலம், நட்சத்திரங்கள் பற்றி ஆய்வு செய்ய பயன்படும்.

மற்றொன்று, சிங்கப்பூரை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 106 கிலோ எடை கொண்ட எக்ஸ்-சாட் செயற்கைகோள். பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை விஞ்ஞானிகள் செய்து வருகிறார்கள். ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய விஞ்ஞானிகள், வரும் 20ம் தேதி காலை 10.12 மணிக்கு ராக்கெட்டை ஏவ முடிவு செய்துள்ளதாக இஸ்ரோ நேற்று அறிவித்தது. இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை தொடங்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...