Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 17, 2011

மறுதேர்தல் நடந்த 8 சாவடிகளில் 81 சதவீதம் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் முடிந்தது

சென்னை: தமிழகத்தில் கடந்த 13ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவில் வன்முறை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக, வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று மறு வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. ஆறு தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த மறுதேர்தலில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, வாக்குப் பதிவு இயந்திரம் உடைப்பு மற்றும் தேர்தல் புறக்கணிப்பு ஆகிய பிரச்னைகளால் தமிழகத்தில் 8 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


அதன் அடிப்படையில், நெய்வேலி, திருவிடைமருதூர் தொகுதிகளில் தலா 2 வாக்குச்சாவடிகள், ஆரணி, போடிநாயக்கனூர், சங்கரன்கோவில், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 8 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. 13ம் தேதி நடந்த தேர்தலின்போது மக்கள் ஆர்வத்துடன் குவிந்ததை போலவே, நேற்றும் அதிகளவில் வந்து வாக்களித்தனர். 8 வாக்குச் சாவடிகளில் 5 வாக்குச் சாவடிகளில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்.

நெய்வேலி 55வது வாக்குச் சாவடியில் ஆண்கள் 83.7 சதவீதமும் பெண்கள் 84.8 சதவீதமும், 56வது வாக்குச் சாவடியில் ஆண்கள் 80.7, பெண்கள் 85மும் வாக்களித்துள்ளனர். திருவிடைமருதூர் 107வது வாக்குச்சாவடியில் ஆண்கள் 79.5, பெண்கள் 86.2 சதவீதமும், போடிநாயக்கனூர் 146வது வாக்குச் சாவடியில் ஆண்கள் 78.3, பெண்கள் 83.2 சதவீதமும், கிள்ளி யூர் 121வது க்குச்சாவடியில் ஆண்கள் 60.9, பெண்கள் 78.2 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...