Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 24, 2011

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 எனும் புதிய சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறு, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் விரும்பும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் பலவகை பயன்களை உள்ளடக்கிய அடுத்த தலைமுறைக்கான பப்ளிக் பீட்டா இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 அறிமுகப்படுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய கிளவுட் சேவைகளை இணைத்துக் கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட்ஆபிஸ், ஷேர் பாயிண்ட் ஆன்லைன், எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன், லிங்க் ஆன்லைன் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து தற்போது வணிகர்களின் பயன்பாட்டுக்காக விரிவுபடுத்தி கொண்டுவந்துள்ளது.

ஆபிஸ் 365 பப்ளிக் பீட்டாவினை இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களும் உலகின் பல்வேறு பகுதியில் உள்ளவர்களும் இணையதளத்தின் வாயிலாகப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25-க்கும் குறைந்த அளவுக்குப் பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பீட்டா தொகுப்பினை பயன்படுத்துவதற்கு உலக அளவில் 70 விழுக்காட்டுக்கும் மேலான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. தொடக்கத்திலேயே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஆபிஸ் 365 சாஃப்ட்வேர் சிறிய வணிக நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமான தொழில்நுட்பம் என்பதை நிரூபித்துள்ளது.

சிறிய வணிகங்களுக்குத் தேவையான அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத்தினை சீரிய முறையிலான தொடர்புக்கு வழிவகுக்கும் முறையில் மிகுந்த பாதுகாப்புடனும், தகவல் தொழில்நுட்ப நிர்வாகத்திற்கு உதவும் வகையிலும் தயாரித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 என்ற பீட்டா வாய்ப்பினை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தி அதன் பயனை பெறலாம் என்று நிறுவனத்தின் வணிகப் பிரிவு இயக்குநர் சஞ்சய் மன்சந்தா தெரிவித்தார்.

இணையதள முகவரி:

www.microsoft.com/India/Cloud

http://www.microsoft.com/en/in/default.aspx

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...