Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 29, 2011

நோய் தடுக்கும் தாம்பூலம்

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.

கிமு 2- ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன்: பிரதீபா பட்டீல் அறிவிப்பு

புதுடெல்லி, ஏப்.29-


இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ந் தேதி பதவி ஏற்றார். இவர் இந்தியாவின் 12-வது ஜனாதிபதி ஆவார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் ஜனாதிபதியாக பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த (2012) ஆண்டு ஜுலை மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

பாடத்திட்டம் தரமானதாக இல்லை: சமச்சீர் கல்வி திட்டத்தை ஏற்க மாட்டோம்; தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, ஏப்.29-


தமிழ்நாடு மெட்ரிக் குலேசன் மேல்நிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.கே.வெங்கடாசல பாண்டியன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமச்சீர் கல்விக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் இருக்க கூடிய கல்வியின் தரத்தை குறைக்ககூடாது.சமச்சீர் கொள்கையின்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை.

தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

போனோபென்: தாய்லாந்து- கம்போடியா இடையே கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த தற்காலிக போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கம்போடிய அரசு செய்தி தொடர்பாளர் பெய்ஷிப்ஹான் தெரிவிக்கையில், தாய்லாந்து- கம்போடிய எல்லையில் உள்ள போனோபெம் டான்கிராக் பகுதியில் பழ‌மையான கோயிலை ஆக்கிரமிப்பதில் கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை ஏற்பட்டு வந்தது. உள்நாடடு அரசியல் காரணங்களுக்காக இந்த சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பிலும் சுமார் 40 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் படி போர் நிறுத்தம் செய்வது என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி போரின் போது மூடப்பட்டிருந்த எல்லைப்புறம் மீண்டும் திறப்பது எனவும், தாய்லாந்தில் இந்த வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் அண்டை நாடுகளில் நல்லுறவு வேண்டியும் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தரப்பில் அந்நாட்டு ராணுவ உயரதிகள் உள்ளிட்டோர் இந்த போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த போரினால் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எல்லைப்பகுதியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர்

ஏப்ரல் 28, 2011

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.


‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

விலைவாசி உயர்வு; ஆசிய மக்கள் 6 கோடி பேர் பசி-பட்டினியால் தவிப்பார்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, ஏப். 28- : ஆசிய நாடுகளில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆசிய நாடுகள் சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டு வந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் கச்சா எண்ணை விலையும் வேகமாக உயர்ந்து கடந்த 31 மாதங்களுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு; 2 செல்போன் நிறுவனங்களின் ரூ.5 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்க பிரிவு விரைவில் நடவடிக்கை

புதுடெல்லி, ஏப்.28- ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இரு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து வருகின்றன.

அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணைகள் குறித்த அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அமலாக்கப்பிரிவு வக்கீல் வேணுகோபால் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, நீதிபதிகளிடம் கூறிய வேணுகோபால் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்ட 2 செல்போன் நிறுவனங்கள் பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்து உள்ளன.

ஏர் இந்தியா பைலட் தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் ரத்து: ஸ்டிரைக்கால் பயணிகள் பெரும் தவிப்பு

புதுடில்லி: சம்பள உயர்வு கோரி, ஏர் இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால், விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பைலட்கள் தொழிற்சங்கத்திற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெறும்படி டில்லி ஐகோர்ட், பைலட் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் நோய்க்கு மருந்து தண்ணீரில் உள்ளது முயற்சி செய்யுங்கள்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.


1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160 ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

குவாண்டனாமோ:சிறைக்கைதிகளை சித்திரவதை- ஒத்துழைத்த அமெரிக்காவும், பிரிட்டனும்

லண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறைக்கைதிகளை சித்திரவதைச்செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவின் சி.ஐ.ஏவும், பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தைக்குறித்து பிரிட்டீஷ் அமைச்சர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 27, 2011

டெல்லி,மும்பை விமானநிலையங்களில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி:டெல்லி,மும்பை விமானநிலையங்களில் வளர்ச்சித் திட்டத்தின் பெயரால் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கன்ஸ்யூமர் ஆன்லைன் ஃபவுண்டேசன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.


முன்னர் விமான நிலையங்களில் கட்டணம் வசூலிப்பதற்கு ஆதரவாக தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தான் நீதிபதிகளான ஸிரியக் ஜோஷப், எ.கெ.பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்துள்ளது.

கறுப்புப்பணம்:இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவேன் – ஜூலியன் அஸாஞ்ச்

புதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.


விக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும் ஆவணங்களில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் உள்ளன. உடனடியாக வெளியிடப்போகும் ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்களை தான் வாசித்துள்ளதாக அஸாஞ்ச் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 26, 2011

ஒவ்வொரு வீட்டுக்கும் 4 சி.எப்.எல்., பல்புகள் இலவசம்: மின்சாரம் சேமிக்க ஏற்பாடு

தமிழகம் முழுவதும், ஒவ்வொரு வீட்டுக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும், மத்திய அரசு திட்டத்தில், நான்கு சி.எப்.எல்., பல்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, மாநிலம் முழுவதும், 2 முதல், 5 மணி நேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில், குண்டு பல்புகளை பயன்படுத்துகின்றனர். இதில், 60 வாட்ஸ் குண்டு பல்பு, தினமும் ஒரு மணிநேரம் எரிந்தால், 65 கிராம் கரியமிலவாயு வெளியேறுவதுடன், மாதத்தில், 1.8 யூனிட் செலவாகும்.அதேநேரம், 15 வாட் சி.எப்.எல்., பல்பு, தினம் ஒரு மணி நேரம் வீதம், ஒரு மாதம் எரிந்தால், 0.45 யூனிட் மட்டுமே செலவாவதுடன், 16 கிராம் கரியமில வாயு மட்டுமே வெளியேற்றுகிறது.தமிழகத்தில் ஒன்றரை கோடி, வீட்டு மின் இணைப்பு உள்ள நிலையில், அனைவரும் சி.எப்.எல்., பல்பு பயன்படுத்தினால், 1,000 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் மிச்சப்படுத்தலாம். மேலும், குண்டு பல்புகளை விட, சி.எப்.எல்., பல்புகளில் கரியமிலவாயு வெளியேற்றம் குறைவாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்!!

புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம், பெட்ரோல் விலை எந்த நேரத்திலும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.


பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு முறை, மத்திய அரசு வசம் இருந்துவந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை ஈடுகட்ட முடியாமல், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்றுவந்தன.இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, மானியம் உட்பட, சில சலுகைகளை அரசு வழங்கியபோதும், அது, போதுமானதாக இல்லை. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கும் வகையில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.இது, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 50 ரூபாய்க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, 60 ரூபாயை தாண்டி நிற்கிறது.

ஏப்ரல் 25, 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.


1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு

2. பட்டய படிப்பு (டிப்ளோமா)

3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

யெமன்:30 தினங்களுக்குள் பதவி விலகுவேன் – ஸாலிஹ்

ஸன்ஆ: அரபு நாடுகள் முன்வைத்த ஒப்பந்தத்தின் படி 30 தினங்களுக்குள் பதவி விலகுவேன் என யெமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார். 32 வருடங்களாக பதவியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசுக்கெதிராக நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மேலும் இரத்தக்களரியை தடுப்பதற்கான முயற்சிதான் இது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆறு நாடுகள் அடங்கும் ஜி.சி.சி தயாரித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு 30 தினங்களுக்குள் ஸாலிஹ் பதவி விலகி அதிகாரத்தை துணை அதிபர் அப்துற்றாபு மனூர்ஹாதியிடம் ஒப்படைக்கவேண்டும். இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தும் வரை இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்க எதிர்கட்சியிலிருந்து ஒருவரை ஸாலிஹ் நியமிக்க வேண்டும்.
குற்ற விசாரணையிலிருந்து ஸாலிஹ் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒப்பந்தத்தில் உள்ளது. ஸாலிஹின் முடிவை வரவேற்ற அமெரிக்கா, அமைதியான முறையில் அதிகார ஒப்படைப்பு விரைவில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது

ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர். அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக தன்னை இணைத்துக் கொள்ளவும் தீமானிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் மௌலானா சையது ரபே ஹுஸ்னி தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் அலஹாபாத் நீதிமன்ற பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு மற்றும் இடிப்பு வழக்கு, லிபரான் குழுவின் அறிக்கை, கல்வி உரிமை மற்றும் ஷரியத் சட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இனப்படுகொலை:மோடியின் பங்கினை வெளிப்படுத்திய சஞ்சீவ் பட் உயிருக்கு அச்சுறுத்தல்

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பங்கினை வெளிப்படுத்திய மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


போதுமான பாதுகாப்பை வழங்கவேண்டுமென 3 தடவை கோரிக்கை விடுத்த பிறகும் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனத்தை திரும்ப பெற்றுக்கொண்டு அவரை அலைக்கழிக்கிறது குஜராத் அரசு.

ஓர் வஃபாத் செய்தி!

நம‌தூர் மர்ஹூம் காத‌ர் பாட்ஷா(நாட்டாண்மை) அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் ஹிதாய‌த்துல்லாஹ் அவ‌ர்க‌ள் 23.04.2011 ச‌னிக்கிழ‌மை இர‌வு தாருல் பாணாவை விட்டும் தாருல் பாகாவை அடைந்து விட்டார்க‌ள். "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிஊன்".


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

ஏப்ரல் 24, 2011

அரசு சட்டக் கல்லூரிகளில் பி.எல். பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 18ம் தேதி முதல் வழங்கப்படும்

அரசு சட்டக் கல்லூரிகளில் பி.எல்., பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள், அடுத்த மாதம் 18ம் தேதி முதல் வழங்கப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறினார்.


இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறியது:

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 எனும் புதிய சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறு, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் விரும்பும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் பலவகை பயன்களை உள்ளடக்கிய அடுத்த தலைமுறைக்கான பப்ளிக் பீட்டா இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 அறிமுகப்படுத்தப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய கிளவுட் சேவைகளை இணைத்துக் கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட்ஆபிஸ், ஷேர் பாயிண்ட் ஆன்லைன், எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன், லிங்க் ஆன்லைன் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து தற்போது வணிகர்களின் பயன்பாட்டுக்காக விரிவுபடுத்தி கொண்டுவந்துள்ளது.

மின்வெட்டு அதிகரிப்பால் முடங்கின தொழில்கள்: குறைந்தது பண புழக்கம்

கோடை காலம் துவங்கிய நிலையில், உச்சபட்ச மின் நுகர்வு, 11 ஆயிரத்து 200 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க தமிழகத்தில் தினமும், 5 முதல் ஒன்பது மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாத வாரியம், சென்னையில் தினமும் ஒரு மணி நேர மின் தடையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதிகரித்துள்ள மின் தடை நேரத்தால், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளன. ஏற்றுமதி தொழில் உள்ளிட்டவைகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பண புழக்கம் குறைந்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகள் மூலம், 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மின் உற்பத்தியை விட நுகர்வு அதிகரித்ததால், 2008 செப்., 1ம் தேதி முதல் தமிழகத்தில், இரண்டு மணி நேர மின் தடை அமலுக்கு வந்தது. கோடை துவங்கிய நிலையில் ப்ரிட்ஜ், "ஏசி' உபயோகம் அதிகரிப்புக்கு ஏற்ப தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையும், 11 ஆயிரத்து 200 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. "கோடை கால மின் தேவை சமாளிக்கப்படும்' என, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமி தெரிவித்திருந்தார். ஆனால், புதிய அனல்மின் நிலையங்கள் ஒன்று கூட இன்னமும் மின் உற்பத்தியை துவங்கவில்லை. பற்றாக்குறை சமாளிக்க ஒரு வாரத்துக்கு முன் வெளிமாநிலங்களில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு, 10 முதல் 14 ரூபாய் கொடுத்து பீக்-அவரில், 2,000 மெகாவாட் வரை வாரியம் மின் கொள்முதல் செய்தது. இருந்த போதிலும், 1,400 மெகாவாட் மின் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஏப்ரல் 22, 2011

மாசில்லா புது பூமியை படைப்போமா? இன்று உலக பூமி தினம்


நாகரிக வளர்ச்சியால் வனங்கள், நீர் நிலைகள், விளை நிலம் அழிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஓசோன் பாதிப்பு இப்படி இயற்கைக்கு எதிராக, நாம் தெரிந்தே செய்யும் சதியால் ஆபத்தை சுமந்து கொண்டிருக்கிறோம்.

மாசில்லா பூமியை நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல, நாம் செய்ய வேண்டியது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதென்ன?

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெசி ஜெயகரன்: ஐ.நா.,1972 ல் சர்வதேச தலைவர்களை கூட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க தனி அமைப்பை ( ஐ.என்.இ.பி.,) துவக்கியது. இதில் 1992 வரை 20 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டது. மரக்கன்றுகள் நட அரசுகள், தொண்டு நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் பசுமைப்படைகள் உருவாக்கப்பட்டன. கல்லூரிகளில் சுற்றுச்சுழல் துறைகள் ஏற்படுத்தப்பட்டது. பின் நீர், நிலம், காற்று, ஒளி, ஒலி மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். சூரிய சக்தியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். வீட்டுத்தோட்டங்கள் அமைத்து, அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மனவள மாற்றமே மண்ணை வளமாக்கும்.

ஏப்ரல் 21, 2011

மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்​களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி:’இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

அறிவுப்பூர்வமான-வளர்ச்சி மற்றும் எதிர்கால அமைதிக்கான வழிதடம் அமைத்தல் என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதி: துல்லியமாக கணக்கிட வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியின் அளவை துல்லியமாக கணக்கிட வேண்டும் என, விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், சென்னை நகர மக்களின் தாகத்தை தணிக்கும் ஜீவ நாடியாக உள்ளது.சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, கோடை காலத்தில் கூட, வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.ஆனால், இந்த ஆண்டு, எதிர்பாராத தொடர் மழையால், ஏரி நிரம்பியும் பொதுப்பணித் துறையினர் அறிவிப்பின்றி தண்ணீரை வெளியேற்றியதால், சுற்றுப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததோடு, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது கோடையின் துவக்கத்திலேயே, வீராணத்தில் தண்ணீர் குறையத் துவங்கி, முற்றிலும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.

10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு

சென்னை :

சமச்சீர் கல்விக்கான 10ம் வகுப்பு பாடப்புத்தகம் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு ஆங்கில மற்றும் தமிழ் வழி பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. www.pallikalvi.in என்ற இணையதளத்தில் 10ம் வகுப்பு பாட புத்தகங்களை காணலாம். இத்தகவலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 20, 2011

எளிமையாகிறது இன்கம் டாக்ஸ்!

புதுடில்லி:ஐந்து லட்சரூபாய் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், தனியே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசிய மில்லை என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ”திர் சந்திரா தெரிவித்துள்ளார். வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.


வருமான வரி கணக்கை எளிமையாக தாக்கல் செய்வதற்கு, வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றான, மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை, வரி செலுத்துவோரிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாத ஊதியம் பெறு வோர் மற்றும் சிறு வணிகர்கள் மிக எளிதாக வருமான வரி செலுத்துவதற்கு வசதியாக 'சாஹஜ்' மற்றும் 'சுகம்' என்ற இரு வகையான வருமான வரிப் படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மின்னணு முறையில் இந்த விண்ணப்ப படிவங்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுதிர் சந்திரா மேலும் தெரிவித்தார்.

ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா

ஹவானா:கியூபா கம்யூனிஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ததாக ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

‘கியூபா டிபேட்’ என்ற இணையதள பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கியூபாவின் நீண்டகால அதிபரும், கம்யூனிஸ்ட் ரிபப்ளிக்கின் ஸ்தாபகருமான காஸ்ட்ரோ தனது ராஜினாமாவை உறுதிச்செய்துள்ளார்.

காஸ்ட்ரோ 1965-ல் துவக்கப்பட்ட கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் தற்போதைய சூழலுடன் இணங்கி செல்ல தன்னால் இயலாது என்பது அதிபர் ரவுலுக்கு தெரியும். தீர்மானம் எடுக்கும் திட்டங்களைக் குறித்து என்னிடம் கூறுவதில் அவர் தோல்வியை தழுவவில்லை என ஃபிடல் காஸ்ட்ரோ தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கியூபாவின் வரலாற்றில் முதன்முறையாக பொருளாதார சீர்திருத்தத்திற்கும் தனியார் சொத்துரிமைக்கும் கட்சியின் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபிடல் காஸ்ட்ரோவின் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

48 ஆண்டுகளாக ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபர் பதவியை அலங்கரித்திருந்தார்

வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகளிடம் குழப்பம்: 4 நாள் அவகாசம் போதுமா?

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன. ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், புதிய அரசு பதவியேற்பதற்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், இதற்குள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று கவலை அடைந்துள்ளன.


அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், மே மாதம் 13ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது, தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம். தேர்தலுக்கு போதிய கால அவகாசம் தராததற்கும், ஓட்டு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்ததற்கும், ஆளும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனை கடுமையாக அர்ச்சித்து வருகின்றன.இந்நிலையில், வெற்றியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரதான கட்சிகளிடையே திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 16ம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 17ம் தேதி, சட்டசபையை கூட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அத்தேதியுடன் சட்டசபை ஆயுட்கால வரையறை முடிகிறது.இதுபோன்ற சூழலில், ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், வெறும் நான்கு நாட்களே அவகாசம் இருப்பதால், இந்த குறுகிய காலத்திற்குள் ஆட்சி அமைக்க தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று, கட்சிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 19, 2011

இதயம் காக்கும் பழங்கள்

இன்றைய நவீன உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.


அவை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம். இந்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்கு அளித்த கொடை தான் காய்களும், கனிகளும்.

கோடை சுற்றுலாவுக்கு எழில்மிகு பிச்சாவரம்

சிதம்பரம், ஏப். 18: மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழலாம்.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.

ஏப்ரல் 18, 2011

செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி16 20ம் தேதி ஏவப்படும்

பெங்களூர்: மூன்று செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி16 ராக்கெட் நாளை மறுதினம் காலை ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விஞ்ஞானிகள், ரிசோர்ஸ்சாட்-2 என்ற தொலையுணர்வு செயற்கைகோளை தயாரித்துள்ளனர். 1,206 கிலோ எடை உள்ள இந்த செயற்கைகோள் இயற்கை வளங்களை படமெடுத்து பூமிக்கு அனுப்பும். இந்த செயற்கைகோளை ஏவுவதற்கான ஏற்பாடுகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.

ஏப்ரல் 17, 2011

காய்ந்தது வீராணம் ஏரி!கனவாய் போனது சென்னைக்கு குடிநீர்!


தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஏரி,காட்டுமன்னார்குடி சுற்றுவட்டார பாசனத்தின் உயிர் நாடி,
சென்னைக்கு குடிநீர் இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்ட வீராணம் ஏரி இன்று காய்ந்துபோய் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் கிரிக்கெட் மைதானமாகவும் மாறியுள்ளது.பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை கொட்டி சென்னைக்கு தண்ணீர் என்ற கோசத்தோடு கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

செய்தி:அபூ தஃப்ஹீம்

கொள்ளுமேடு அருகே சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம்

கொள்ளுமேடு அருகே வீராணம் ஏரிக்கரை சாலையில் ஏற்பட்ட   சாலை விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.சைக்களில் வந்துக்கொண்டிருந்த திருச்சின்னபுரத்தை சேர்ந்த ஒரு முதியவர் மீது அவருக்கு பின்னால் டிவிஎஸ் வண்டியில் வந்துக்கொண்டிருந்த லால்பேட்டையை சேர்ந்த இரு சகோதரர்கள் தவறுதலாக மோதினர் இதில் டிவிஎஸ் யில் வந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


அதன் பிறகு லால்பேட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆம்புலன்சில் காயம்பட்ட சகோதரர்கள் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

செய்தி:அபு தஃப்ஹீம் கொள்ளுமேடு

மறுதேர்தல் நடந்த 8 சாவடிகளில் 81 சதவீதம் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் முடிந்தது

சென்னை: தமிழகத்தில் கடந்த 13ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவில் வன்முறை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக, வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று மறு வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. ஆறு தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த மறுதேர்தலில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, வாக்குப் பதிவு இயந்திரம் உடைப்பு மற்றும் தேர்தல் புறக்கணிப்பு ஆகிய பிரச்னைகளால் தமிழகத்தில் 8 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் சேனல்

டெல்அவீவ்:
ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரேல் சேனலான 2 டி.வி நேற்று வெளியிட்டது.

நகாப் சிறையிலிருந்து கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு படம் பிடிக்கப்பட்டுள்ளன இவ்வீடியோ காட்சிகள். சித்தரவதையின் இறுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. இக்காட்சிகளைத்தான் இஸ்ரேலிய சேனல் வெளியிட்டதாக குத்ஸ்னா செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு என தனி இண்டெர்நெட்

டெஹ்ரான்:
உலகம் முழுவதும் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு என தனி இண்டெர்நெட் விரைவில் உருவாக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. தற்போது வேர்ல்டு வைட் வெப் என்றழைக்கப்படும் இண்டெர்நெட் மூலம் அனைத்து மக்களும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைத்துவருகிறது. இந்த இண்டெர்நெட்டில் அமெரிக்கா முக்கியமான பங்கை வகிக்கிறது. பெரும்பாலான சைட்டுகள் அமெரிக்காவை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இண்டெர்நெட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈரான் அரசு இஸ்லாமிய மக்களுக்கு என தனியான இண்டெர்நெட்டை உருவாக்க உள்ளது. இந்த இண்டெர்நெட்டில் இஸ்லாமின் கொள்கைகள், சர்வதேச தகவல் பரிமாற்றத்திற்காக பார்ஸி மொழியை மேம்படுத்துவது போன்றவை உட்பட பல்வேறு தகவல்கள் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என ஈரான் அரசின்பொருளாதார பிரிவை சேர்ந்த அலி அக்வமொகம்மதி தெரிவித்துள்ளார்

இந்தியா - கஜகஸ்தான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

அஸ்தானா: இந்தியா - கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மன்மோகன் சிங், கஜகஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபர் நுர்சுல்தான் நஜர்பயேவுடன், இருதரப்பு உறவு குறி த்து பேச்சு நடத்தினார். இதில், இரு நாடுகளுக்கும் இடையேயான, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விஷயமும் முக்கிய இடம் பெற்றது. இதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே, அணுசக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

ஏப்ரல் 15, 2011

ஐ.நா அறிக்கை:ஃபலஸ்தீன் நாட்டின் உதயத்திற்கான துவக்கம் – ஸலாம் ஃபய்யாத்


ராமல்லா:ஃபலஸ்தீனில் ஆட்சி புரிய தனது அரசு உடன்பாடானது என கூறும் ஐ.நாவின் அறிக்கை ஃபலஸ்தீன் நாட்டின் உதயத்திற்கான துவக்கம் என ஃபலஸ்தீன் ஆணையத்தின் பிரதமர் ஸலாம் ஃபய்யாத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஐ.நா பிரதிநிதிகளும், சர்வதேச நிதித்துறை நிறுவனங்களும் பிரஸ்ஸல்ஸில் நடத்திய கூட்டத்தின் வெளியிடப்பட்டுள்ள தீர்மானங்களைக் குறித்து பதிலளிக்கையில் ஃபய்யாத் இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14, 2011

தமிழகம் முழுவதும் கோடைகால பயிற்சி முகாம்கள் – நடைபெறும் இடம் மற்றும் விண்ணப் படிவ மாதிரி

இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு மாணவ மாணவியர்கள் கோடைகால விடுமுறையை நல்ல வழியில் செலவிட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை வருகின்ற மே மாதம் முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.


பயிற்சி முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் தொலைபேசி எண்கள்

Download List

கோடைகால பயிற்சி முகாமில் சேருவதற்காக விண்ணப் படிவ மாதிரி


Download Form

94 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: ஓட்டு எந்திரங்களுக்கு ராணுவ பாதுகாப்பு; கட்சி ஏஜெண்டுகள் இரவு-பகலாக கண்காணிப்பு

சென்னை, ஏப். 14-

தமிழக சட்டசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்சி ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 94 மையங்களில் அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 234 தொகுதி ஓட்டுக்கள் இந்த 94 மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

அங்கு மின்னணு எந்திரங்கள் அறைகளில் வைத்து, அந்த அறைகள் “சீல்” வைக்கப்பட்டன. அந்த அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை வாசல் முன்பு ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி காவலுக்கு நிற்பார்கள். அவர்களை தொடர்ந்து சிறப்புப்படை போலீசார் அரண் போல நிற்பார்கள்.

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன் றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

49 ஓ' போடுவதில் வாக்காளர்கள் ஆர்வம்

குஜிலியம்பாறை: இதுவரை நடந்த தேர்தல்களில், போட்டியிடும் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு, ஓட்டு போட வேண்டிய நிலையில், வாக்காளர்கள் இருந்தனர். வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள், ஓட்டு போட செல்லாமல் வீட்டில் இருந்து கொள்வர். சமீப காலமாக, தேர்தல் கமிஷனின் புதிய விதிகள், அதிரடி மாற்றங்களால். வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள், "49 ஓ' படிவத்தை பயன்படுத்தலாமென அறிவித்தது. 2011-சட்டசபை தேர்தலில், 49 ஓ வை,மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இச்செயல், விழிப்புணர்வை காட்டுவதாக இருந்தாலும், அவர்கள், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதை தெளிவாக காட்டுகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் ஆட்சிகளில், ஊழல், குற்ற செயல்கள் மலிந்து விட்டது. சுயநலத்திற்காக அரசின் கஜானாவை காலியாக்கும், இலவச அறிவிப்புகளை தேர்தல் கமிஷன் கட்டுப்படுத்த தவறி விட்டது என்கின்றனர். இதே நிலை நீடித்தால், வரும் காலங்களில், "49 ஓ'வில் வாக்களிப்போர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

ஏப்ரல் 13, 2011

ஓட்டு சதவீதம் அதிகரிப்பு யாருக்கு லாபம்?


ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது யாருக்கு லாபத்தை தரும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடந்து முடிந்துள்ள தேர்தலில் நேற்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. படித்தவர்கள், படிக்காதவர்கள், பெண்கள், முதியோர் என, பலரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுகளை பதிவு செய்தனர். கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் 70.82 சதவீதம் பதிவாகி இருந்தது அதிகபட்சமாக இருந்தது. அதற்கு முந்தைய தேர்தல்களில் குறைவான ஓட்டுகளே பதிவாகி இருந்தன.கூடுதல் சதவீத ஓட்டுகள் பதிவானால், அது ஆளுங்கட்சிக்கு எதிராக அமையும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. பொதுமக்கள், ஆளுங்கட்சி மீது தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் போது மட்டுமே, அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து ஓட்டுக்களை பதிவு செய்வார்கள் என்பதால் இந்தக் கருத்து உள்ளது. ஆனால், திருமங்கலம், மதுரை மத்தி, மதுரை மேற்கு, வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் இந்தக் கூற்று பொய்யாக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 80 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆனால், ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அதற்கு காரணம், பண வினியோகம் என்ற குற்றச்சாட்டு இருந்தது. பணம் பெற்ற வாக்காளர்கள் அதற்காகவாவது ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று கருதுவதால் ஓட்டு சதவீதமும் அதிகரிக்கிறது.இந்த பொதுத்தேர்தலிலும் கட்சிகள் பாரபட்சமின்றி பண வினியோகம் செய்துள்ளன. பண வினியோகத்தில் ஆளுங்கட்சி முதல் இடத்திலும், எதிர்க்கட்சி இரண்டாமிடத்திலும், கூட்டணிக் கட்சிகள் மூன்றாமிடத்திலும் இருந்தன. எனவே, விழுந்துள்ள ஓட்டுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு எதிராக விழுந்துள்ளனவா அல்லது இடைத்தேர்தல் முடிவுகளைப் போல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா என்பதை தேர்தல் முடிவுகளின் போது மட்டுமே அறிய முடியும்.

இதுவரை இல்லாத அளவு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஆர்வமாக திரண்டு வந்தனர் மக்கள்


சென்னை:தமிழகத்தின் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கவுள்ள சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. மாநிலம் முழுவதும் ஆர்வத்துடன் திரண்டு வந்து பொதுமக்கள் ஓட்டளித்தனர். பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் இன்றி, அமைதியாக தேர்தல் நடந்ததால், முதன் முறையாக ஓட்டுப்பதிவு 80 சதவீதமாக உயர்ந்தது.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெரும்பாலான தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நேரத்திற்கு முன்பாகவே, வாக்காளர்கள் வந்து வரிசையில் காத்திருந்ததால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. சில ஓட்டுப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுது காரணமாக தாமதம் ஏற்பட்டது.சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்த வண்ணம் இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.தேர்தல் கமிஷன் மூலம், புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இது தவிர, கட்சிகள் சார்பிலும் பூத் சிலிப் வழங்கப்பட்டிருந்ததால், வாக்காளர்கள் இதை எடுத்து வந்து எளிதாக ஓட்டுப்பதிவு செய்தனர்.சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட, அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டளித்தனர். தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக ம.தி.மு.க., அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஓட்டளித்தார். மாநில காவல்துறையோடு இணைந்து, துணை ராணுவப்படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் என, ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பதட்டமான தொகுதிகள் என, அடையாளம் காட்டப்பட்டு இருந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் கள்ள ஓட்டு போடுவதாக வந்த புகாரையடுத்து, துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சேலத்தில் போலீசார் தாக்கியதில் அ.தி.மு.க., தொண்டர் இறந்ததாக புகார் எழுந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஓட்டுப்பதிவின் போது குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது.ஓட்டுப்பதிவை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம், தேர்தல் அதிகாரிகள் கண்காணித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஓட்டுச்சாவடிகளில் தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் தராத வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களின் செயல்பாடு அமைந்திருந்தது.
தமிழக டி.ஜி.பி., போலோநாத் கூறும்போது, "தமிழகம் முழுவதும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. பெரிய அளவிலான புகார்கள் ஏதும் வரவில்லை. ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு அளித்தனர்' என்றார்.
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையிலும், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவ்வாறு காத்திருந்தவர்களுக்கு, "டோக்கன்' வழங்கப்பட்டு, ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், "சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.வன்முறை, மோதல்கள், ஓட்டுச்சாவடி கைப்பற்றல் போன்ற பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததால், ஓட்டுப்பதிவு 75 முதல் 80 சதவீதமாக உயர்ந்தது என, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம் முதல், மாலை வரை பொதுமக்கள் ஆர்வத்தோடு ஓட்டுச்சாவடிக்கு அலை அலையாய் வந்து ஓட்டளித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் யாருக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல், அரசியல் கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

கொள்ளுமேட்டில் 70% வாக்குகள் பதிவானது

தமிழக சட்டசபை தேர்தல் நமதூரில் அமைதியான முறையில் நடைப்பெற்றது.காலை 8 மணி முதலே மக்கள் பெரும் வருசையில் நின்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.   


 மாலை 5 மணி நேர நிலவரப்படி 70% வாக்குகள் பாதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். நமதூரைச்சேர்ந்த மெஹ்ராஜுத்தீன் நம்மிடம் கூறூம்போது மொத்தம் 923 வாக்குகள் பதிவானதாகவும் அதில் ஆண்களைவிட பெண்களே பெறும் அளவில் வந்து வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார்.ஆண்கள் 405 மற்றும் பெண்கள் 518



 நமது செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கசென்றபோது காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.பிறகு அவர்களிடம் நம்மைப்பற்றி அறிமுகம் செய்து சில படங்களை எடுக்க அனுமதி பெற்றோம். எனவேதான் மக்கள் அதிகம்  இருந்த நேரத்தில் நம்மால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.மொத்ததில் தமிழகம் முழுவதுமே கடும் கட்டுபாடுகளுடன் தேர்தல் நடைப்பெற்றது

செய்தி: அபூ தஃப்ஹீம் கொள்ளுமேடு

89 இந்திய சிறைக்கைதிகளை பாகிஸ்தான் விடுதலைச் செய்கிறது

இஸ்லாமாபாத்:அடுத்த மாதம் 89 இந்திய சிறைக் கைதிகளை விடுதலைச்செய்யப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.


பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய மீன்வர்கள் உள்ளிட்ட சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. இதுத் தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே அண்மையில் துவக்கிவைத்த நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆக்கம் அளிப்பதாக இந்நடவடிக்கை அமையும்.

டெல்லியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் பரிமாறிக்கொண்ட பட்டியலின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்படுவர் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஒப்படைத்த பட்டியலின் அடிப்படையில் இம்மாதம் 11-ஆம் தேதி இந்தியா 39 பாகிஸ்தான் சிறைக் கைதிகளை விடுவித்ததாகவும் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடல் எல்லைகளை மீறுவதைத் தொடர்ந்து இரு நாடுகளுமே ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்களை கைது செய்துவருகின்றன.

தேசிய பெண்கள் கமிஷனின் தலைவாராக யாஸ்மின் அப்ரார் பொறுப்பேற்பு

புது௦டெல்லி:புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு,இந்திய அளவில் பெண்களுக்குக்காக செயல்படும் (NCW)’நேஷனல் கமிஷன் ஆஃப் விமன்’ யாஸ்மின் அப்ராரை புதிய தலைவரகாக அறிவித்துள்ளது.


இவ்வமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்த கிரிஜா வியாஸ் அவர்களின் பொறுப்பிற்கான காலக்கெடு கடந்த ஏப்ரல் 8–ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதால், என்.சி.டபிள்யூ 1990 சட்டத்தின் கீழ், புதிய தலைமைக்கு யாரேனும் பொறுப்பாளரை தேர்ந்தெடுக்கும் வரை யாஸ்மின் அப்ரார் தற்காலிகமாக பணியாற்றுவார் என்று என்.சி.டபிள்யூ (NCW) அறிவித்துள்ளது.

இவர் 2005-ஆம் ஆண்டிலிருந்து என்.சி.டபிள்யூவின் ஒரு உறுப்பினராகவும், 2008-ஆம் ஆண்டில் இப்பொறுப்பிற்காக இரண்டாம் சுற்றுவரை முன்னேறிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் ராஜஸ்தானில் மிகவும் பெயர் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் மற்றும் அம்மாநிலத்தின் நிதி மற்றும் முன்னால் பாராளுமன்றத்தின் விவகாரத்துறை அமைச்சரானா மறைந்த அப்ரார் அஹமதின் மனைவியுமாவர். இவர் ‘ராஷ்ட்ரிய மஹிலா கோஷ்’ என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக உள்ள அமைப்பின் ஆலோசகராவும் உள்ளார்.

சீனாவில் பிரதமர் மன்மோகன் சிங்

சான்யா, ஏப். 12: சீனாவின் சான்யா நகரில் நடைபெறும் ஐந்து நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றார்.


இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு சான்யாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் பங்கேற்க 3 நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் அங்கு சென்றுள்ளார்.

எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஐந்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் அதிபர்களையும் பிரதமர் மன்மோகன் சிங் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு செல்கிறார்.

லிபியா, ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் ஸ்திரமற்ற நிலை குறித்து சான்யா மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

செர்னோபிளை போல அணு அபாயம்: மிக மோசமான நிலையில் ஜப்பான் தவிப்பு

டோக்கியோ: ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக் கதிர்வீச்சின் அளவை, உலகில் உச்சபட்ச அளவான, 7 ஆக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது, செர்னோபிளில் நடந்த அணு உலை விபத்தோடு சமமான அளவாகும். இந்நிலையில், புக்குஷிமா அணு உலைகளில் இருந்து, தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜப்பானின் புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின், உலைகளில், தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து, அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படத் துவங்கியது. கடந்த ஒரு மாத காலமாக, அந்த உலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, ஜப்பான் அரசு போராடியும் பயன் எதுவும் கிட்டவில்லை. உலைகளில் ஏற்பட்டுள்ள வெப்பத்தைக் குறைக்கும் முயற்சி கூட இன்னும் வெற்றி பெறவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உலைகளில் வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஹைட்ரஜன் வாயு உருவாகி அதனால் வெடிவிபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் மேலும் நடக்காமல் இருக்க, உலைகளுக்குள் நைட்ரஜன் வாயு செலுத்தும் முயற்சி இடையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, உலைகளில் உள்ள கதிர்வீச்சு கலந்த நீரை கடலில் கொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் அந்தப் பணியும் நிறுத்தப்பட்டது. இதனால், இன்னும் 10 ஆண்டுகளில் உலைகளை ஒன்றன் பின் ஒன்றாக மூடி விடும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நான்கு அணு உலைகளிலும், ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி பிரதிநிதிகள் நடத்திய ஆய்வில், எதிர்பார்த்ததை விட மிக மோசமான அளவில் கதிர்வீச்சு வெளியாகி வருவது கண்டறியப்பட்டது. அளவு அதிகரிப்பு: ஏற்கனவே, கதிர்வீச்சு விபத்து பற்றிய அளவு, 4ல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலவரம் மிகவும் மோசமான கதியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அணுக் கதிர்வீச்சுப் பேரிடர் சம்பவத்தை, உச்சபட்ச அளவான, 7 ஆக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. கடந்த, 1986ல், முந்தைய ரஷ்யாவும் தற்போது உக்ரைன் நாட்டில் செர்னோபிள் என்ற இடத்தில் இருந்த அணு உலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்திற்கு மட்டும் தான், 7ம் அளவு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானிலும் இந்த 7ம் அளவு பிறப்பிக்கட்டிருப்பதால் அது உலகின் மிகப் பெரும் அணுக் கதிர்வீச்சுப் பேரிடர் விபத்து என்பதும், அதனால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதும் திட்டவட்டமாகிவிட்டது. ஆனால், பிரதமர் நவோட்டோ கான், அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் கதிர்வீச்சின் அளவு குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கதிர்வீச்சால் இதுவரை யாரும் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய, 21 ஊழியர்கள் மட்டும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அமைச்சரவை தலைமைச் செயலர் யுகினோ எடானோ கூறியுள்ளார். நிபுணர்கள் கருத்து: ஜப்பான் அணுக் கதிர்வீச்சு பேரிடர் நிலையை, 7 ஆக அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், "செர்னோபிள் விபத்து மிக மிக மோசமானது. அதையும் இதையும் ஒப்பிடவே முடியாது. இது மிகைப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர். இந்த வாரம், சர்வதேச அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகள், புக்குஷிமா அணுமின் நிலையத்தை நேரில் பார்வையிட்டு நிலவரத்தை மதிப்பிடத் திட்டமிட்டுள்ளனர்.

பொருளாதாரம் இனி மீளுமா? நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பான் பொருளாதாரத்தில், 13 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். உலகில் இதுவரை நிகழ்ந்த இழப்பில் இதுவே மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்போது கணக்கிட்டிருப்பதை விடவும், இழப்பு மிகப் பெரியளவில் இருக்கும் என, ஜப்பான் பொருளாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். ஜப்பான் மத்திய வங்கி கவர்னர் கூறுகையில், "நாட்டு பொருளாதாரம் மிக ஆபத்தான நிலையில் தான் உள்ளது' என, தெரிவித்துள்ளார். ஜப்பான் நிலநடுக்கத்தில், இதுவரை, 13 ஆயிரத்து 228 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்து 529 பேர் காணாமல் போயுள்ளனர். 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்து விட்டனர்.

இலவசத்துக்கு ஓட்டு : விவசாயத்துக்கு வேட்டு

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதைப் போல, இலவசத்துக்கு இலவசம் கொடுத்து, வாக்காளர்களை வசீகரிக்கப் பார்க்கின்றன திராவிட கட்சிகள். வாசலில் இலவசங்களை வழங்கி, டாஸ்மாக் வழியாக குடும்பத்தின் வருமானத்தைப் பறிக்கப் பார்க்கும், இந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் சூட்சுமம், இன்று வரையிலும் பாமர மக்களுக்குப் புரிந்தபாடில்லை.



அது மட்டுமின்றி, இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, இங்கு வாரி வழங்கப்படும் இலவசங்களால் தமிழகத்தின் மீதான சர்வதேச சமுதாயத்தின் பார்வையும் மாறியிருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்னை, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பல்வேறு பிரச்னைகளிலும், தமிழக மக்கள் தெளிவான நிலைப்பாடு எடுக்காததற்கு இந்த இலவசங்களும் காரணம் என்பது, எல்லாரது மனத்திலும் பதிந்துள்ளது.


இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த "இலவசங்களால்' அசுர வேகத்தில் அழியப்போவது விவசாயம் தான் என்ற ஓர் அபாய அறிவிப்பும் ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் விவசாயத்துக்கு ஆள் கிடைப்பது, குதிரைக் கொம்பான விஷயமாக மாறிவிட்டது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், உடல் உழைப்பே இல்லாமல், தினமும், 130 ரூபாய் சம்பளம் கிடைப்பதால், விவசாய வேலைக்குச் செல்ல யாரும் விரும்புவதில்லை. நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, மரம் ஏறுவது போன்ற விவசாய வேலைகளைச் செய்வதற்கு, இதைவிட அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால், விளை பொருட்களுக்கும் அதிக விலை கிடைப்பதில்லை. தண்ணீர் தட்டுப்பாடு, மழைக்குறைவு, உர விலையேற்றம் என, பலமுனைத் தாக்குதல்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த வேலை உறுதித்திட்டம், மிகப் பெரிய சாபக்கேடு.


இந்த கொடுமையை மேலும் அதிகரிக்கும் விதமாக, இத்திட்டத்தில் சம்பளத்தையும் அவ்வப்போது மத்திய அரசு உயர்த்தி வருகிறது. தற்போதுள்ள சம்பளம் மேலும் உயர்த்தப்பட்டால், சிறு தொழில்களுக்கான தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.இதைப் பயன்படுத்தி, விவசாயிகளிடமிருந்து நிலங்களை அடித்துப் பிடுங்குவதற்கு பெரு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களும், ஊழல் பணத்தைக் குவித்துள்ள அரசியல்வாதிகள் அனைவருமாக ரியல் எஸ்டேட் களத்தில் குதித்துள்ளனர்.


பலவிதமான நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள், நல்ல விலை கொடுத்தால் விவசாய நிலத்தை விற்கவும் அதிகம் யோசிப்பதில்லை. விவசாயம் தான் செய்ய வேண்டுமென்று முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருக்கும் மிகச் சில விவசாயிகளையும், திராவிடக் கட்சிகள் இப்போது வெளியிட்டுள்ள, "இலவச' அறிவிப்புகள் மேலும் அச்சுறுத்துகின்றன.

ஏப்ரல் 12, 2011

234 தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் ஓட்டுப்பதிவு : அடுத்தது கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா?


சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டசபை தேர்தல்களுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மே 13ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால், அடுத்து கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா என்பது, மே 13ம் தேதி தான் தெரியும்.

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு ஏப்ரல் 13ம் தேதி (இன்று) ஓட்டுப்பதிவு நடைபெறும் என, மார்ச் 1ம் தேதி, தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான மனு தாக்கல், மார்ச் 19ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடந்தது. மார்ச் 30ம் தேதி வரை, வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டதால், அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.தற்போதைய நிலையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மொத்தம் 2,748 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மொத்த வாக்காளர்கள் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687. இவர்களுக்காக, மொத்தம் 54 ஆயிரத்து 314 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஓட்டுப் போட 62 ஆயிரத்து 461 கட்டுப்பாட்டு கருவிகளும், 66 ஆயிரத்து 799 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பணியில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 749 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசில் பணியாற்றும் 12 ஆயிரத்து 918 பேர் மைக்ரோ பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில், மத்திய துணை ராணுவப் படையினர் 240 கம்பெனிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழக போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர் என ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இரண்டு பெரிய அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., தலைமையிலான அணியில், தொண்டர்கள் மட்டத்தில் நல்ல ஒத்துழைப்பு காணப்படுகிறது. அதே நேரத்தில், தி.மு.க., அணியில் காங்கிரஸ் மீது தி.மு.க.,வினருக்கு அதிருப்தி, காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல், காங்கிரசுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே உள்ள பிரச்னைகள் போன்றவை சவாலாக உள்ளன.

பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில் 119 தொகுதிகளில் தான் தி.மு.க., போட்டியிடுகிறது. அதேநேரத்தில், அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இரு அணிகளுமே பிரசாரத்தில் முழு பலத்தை காண்பித்துள்ளன. இரு தரப்புக்கும் சம அளவில் வாய்ப்புகள் உள்ளதால், அடுத்து கூட்டணி ஆட்சி அமையுமா? தனிக் கட்சி ஆட்சியா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

மே மாதம் 13ம் தேதி தான் ஓட்டு எண்ணிக்கை என்பதால், அதுவரை முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை தேர்தலின் போது பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும் என தேர்தல் கமிஷன் கருதியது. அதன் காரணமாக, மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் சோதனைகள் நடந்தன. இதன் காரணமாக, நேற்று முன்தினம் இரவு வரை, 33 கோடியே 44 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது.

விதிமீறல்கள் நடந்ததாக, தமிழகம் முழுவதும் 61 ஆயிரத்து 982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு நடந்தும், பல இடங்களில் பணப் பட்டுவாடாவும் நடந்துள்ளது. குறிப்பாக, குடிசைப் பகுதி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள் போன்றவற்றில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.இன்று நடக்கவுள்ள ஓட்டுப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், நேற்றே அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஓட்டுச்சாவடிகள் நேற்று தெரிவிக்கப்பட்டு, அவர்களும் நேற்று மாலையே ஓட்டுச்சாவடிகளுக்கு வந்துவிட்டனர்.

விண்வெளிக்கு மனிதன் சென்ற 50-ம் ஆண்டு: ரஷ்யா கொண்டாட்டம்

மாஸ்கோ: யூரிகாகரின் விண்வெளிக்கு சென்றதன் 50-ம் ஆண்டினை ரஷ்யா வெகு சிறப்பாக கொண்டாடியது. விண்வெளிக்கு முதன் முதலாக மனிதன் சென்றுவந்ததன் 50-ம் ஆண்டு ரஷ்யாவில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ரஷ்யாவைச் சேர்ந்த யூரிகாகரின் . சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சோயூஸ் விண்கலம் மூலம் கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி ‌சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். இதன் 50-ம் ஆண்டு விழாவையொட்டி மாஸ்கோவில் வண்ணமயமான வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து அதிபர் டிமெட்ரிமித்வதேவ் கூறுகையில், ஆண்டு தோறும் ஏப்ரல் 12-ம் தேதியினை நிலவில் மனிதன் சென்றதன் சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா.விடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் விடிவு: வருகிறது புதிய ஒதுக்கீடு சட்டம்

புதுடில்லி:"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய, சட்டப் பூர்வ நிபந்தனைகள் அடங்கிய புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும். ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிக்க, 20 ஆண்டுகள் என்றிருந்த வரைமுறையை 10 ஆண்டுகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கோடி கோடியாக கொள்ளையடித்ததால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த பெரும் ஊழலைப் பார்த்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். சி.பி.ஐ., விசாரணையை தொடர்ந்து ராஜா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொலைத்தொடர்பு அமைச்சராக பதவியேற்ற பின், தனது 100 நாள் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கபில் சிபல் நேற்று வெளியிட்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய, சட்டப்பூர்வ நிபந்தனைகள் அடங்கிய புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் கமிட்டி அமைக்கப்படும்.ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரத்தை எப்படி பயன்படுத்துகின்றன என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். இந்த பணியை எந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதை 20 ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. கையகப்படுத்துதல், இணைப்புகள் விஷயத்தில் தளர்வு காட்டப்படும். ஒவ்வொரு தொலைத்தொடர்பு மண் டலத்திலும், போட்டியை சமாளிக்க ஆறு நிறுவனங்களுக்கு குறையாத வகையில் லைசென்ஸ் அளிக்கப்படும். இதில் பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் அடங்கும்.லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தனித்தனியாக பிரிக்கப்படும். ஸ்பெக்ட்ரம் பகிர்வு விஷயத்தில் புதிய கொள்கைப்படி முடிவு செய்யப்படும். புதிய தொலைத்தொடர்பு கொள்கை, இந்தாண்டு இறுதிக்குள் முடிவு செய்யப்படும். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

ஏப்ரல் 11, 2011

லோக்பால் சட்ட மசோதா ஜூன் மாதம் தயாராகி விடும்; வீரப்ப மொய்லி தகவல்

மைசூர், ஏப். 11-


ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சமூக சேவகர் அன்னாஹஸாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து லோக்பால் மசோதாவை விரைவில் கொண்டு வர மத்திய அரசு சம்மதித்தது. சட்டத்தை உருவாக்க 10 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.

இந்த குழுவின் அமைப்பாளரும், மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி மைசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

லோக்பால் திருத்த மசோதாவை உருவாக்க ஜூன் 30-ந்தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் போது இந்த சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அனைத்து எம்.பி.க்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் அந்த கூட்டத் தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டுவேட்டை பிரசாரம் இன்று ஓய்கிறது


சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. 5 மணிக்கு பிறகு பொதுக்கூட்டம் மற்றும் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் தேர்தல் நடக்கிறது. வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தேர்தலையொட்டி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் தொகுதி, தொகுதியாக சென்று ஆதரவு திரட்டினர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டனர். மேலும், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டும் பேசியும் ஆதரவு திரட்டினர். இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் வடிவேலு, பாக்யராஜ், சந்திரசேகர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரும் திமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்ட், பா.ஜ. கட்சிகளின் தலைவர்களும், தங்கள் அணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடந்து வந்த பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. பிரசாரம் இன்றுடன் முடிவதால், தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் கருணாநிதி, நேற்று காலை சிதம்பரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பிற்பகலில், தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதிக்கு சென்ற அவர், கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். இன்றும் திருவாரூரில் ஆதரவு திரட்டும் முதல்வர், அங்கேயே பிரசாரத்தை நிறைவு செய்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாநகர், விருகம்பாக்கம், ஆயிரம்விளக்கு தொகுதிகளில் மக்களை நேற்று சந்தித்து திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். வடசென்னையில் இன்று பிரசாரத்தை முடிக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் முகாமிட்டுள்ளார். நேற்று பிற்பகல், தென்சென்னையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று மாலை வடசென்னையில் பிரசாரத்தை முடிக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் நேற்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இன்றும் இதே தொகுதியில் பிரசாரம் செய்து முடிக்கிறார். பிரசாரத்துக்கு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே அவகாசம் இருப்பதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களும் வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.


234 தொகுதிகளில் 2,773 பேர் போட்டி


தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2ம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து, மார்ச் 19ம் தேதி மனுதாக்கல் தொடங்கியது. மார்ச் 26ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,228 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28, 29 ஆகிய நாட்கள் நடந்தது. 30ம் தேதி வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. வாபஸ் பெற்றது போக 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதியாக 234 தொகுதிகளில் 2,773 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.

மாலை 5 மணிக்கு மேல் தடை

மாலை 5 மணிக்கு பிறகு பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம், வாகனங்களில் சென்றும், மைக்செட், ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கலாம், பூத் சிலிப் வழங்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலையில் எம்.பி.பி.எஸ்.,இன்ஜினியரிங் விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 2011 - 2012ம் ஆண்டிற்கான இன்ஜினியரிங் (அனைத்து பாடப்பிரிவுகள்), பி.பார்ம்., பி.பார்ம் (லேட்ரல் என்டரி), 6 வருடம், 3 வருடம் படிப்பு, எம்.எஸ்., முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை, எம்.பி.பி.எஸ்., - பி.பி.டி., - பி.எஸ்சி., நர்சிங், எம். பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், பி.டி.எஸ்., மற்றும் பல் மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.

பல்கலைக்கழக பதிவா ளர் ரத்தினசபாபதி துவக்கி வைத்து கூறுகையில், "விண்ணப்பங்கள் வரும் ஜூன் 10ம் தேதி வரை வழங்கப்படும். அன்றே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். எம்.பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்' என்றார்.நிகழ்ச்சியில், தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், சிண்டிகேட் உறுப்பினர் முத்துக்குமார், அனைத்து துறை முதல்வர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்

ஏப்ரல் 10, 2011

முகத்திரை சட்டத்தினால் சர்கோசி கட்சிக்கு பின்னடைவு

பிரான்ஸ் நாட்டின் UMP கட்சி கடந்த 26 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை மத்திய பிரான்சில் உள்ள மெரிடியன் ஹோட்டலில் நாட்டின் மதச்சார்பின்மையைப் பற்றி விவாதம் நடத்தியது.அதில் 26 யோசனைகள் முன்வைக்கப் பட்டது.இந்த விவாதத்தில் செய்தி தொடர்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டிருந்தது மட்டுமல்லாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.இந்த விவாதத்தில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பிரான்கிஸ் ஃபில்லோன் மற்றும் பல அமைச்சர்களும் இந்த விவாதத்தில் கலந்துக் கொள்ளவில்லை.இஸ்லாத்தைப் பற்றிய இந்த பிரச்சனை சர்கோசி ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெரியதாகப் பார்க்கப் படுகிறது.UMP கட்சியின் தலைவரான ஜீன் பிரான்கிஸ் என்பவரால்தான் பிரான்சில் பெண்கள் முகம் மறைக்கத் தடை சட்டம் கொண்டு வர காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.இந்த சட்டத்தினால் அடுத்த வருட அதிபர் தேர்தலில் எங்களுக்கு ஆதரவு பெருகும் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் எதிர்கட்சித் தலைவரான பில்லோன் "இந்த பிரச்சனையால் 2012 தேர்தலில் சர்கோசி பெரும் பின்னடைவை சந்திப்பார்" என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 09, 2011

புதுவை சட்டசபை தேர்தலில் கட்சி பாகுபாடின்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு! த.த.ஜ

நடைபெறபோகும் புதுவை சட்டசபை தேர்தலில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு தகுதி அடிப்படையில் ஆதரவு அளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் புதுச்சேரி பஹாருதீன் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் சமுதாயத்திற்கு 6.1 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, இஸ்லாமிய வங்கி, வட்டி இல்லா கடன், அரபி, உருதுமொழி பாடத்திட்டம், பள்ளிவாசல் சொத்துகளைப் பள்ளிவாசல்களே நிர்வகிக்கும் உரிமை கேட்டு பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது.

மேலும் சட்டசபை தேர்தல் அறிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கென்று எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய ஒட்டுமொத்த ஆதரவை எந்த கூட்டணிக்கும் வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளது.

ம.தி.மு.க - தி.மு.க. விரைவில் இணையும் - கருணாநிதி சூசகம்

ம.தி.மு.க.வும் தி.மு.க.வும் விரைவில் ஒன்றிணையும் என தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்திருந்த கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளி்த்தார்.

அப்போது ம.தி.மு.க. வைச் சார்ந்த பிரமுகர்கள் தி.மு.க வுக்கு ஆதரவாக பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, "தமிழகத்தில் விரைவில் ஒன்றுபட்ட திராவிட இயக்கம் உருவாகும்" என தெரிவித்தார். ம.தி.மு.க. வின் சில மாவட்ட செயலாளர்கள் வரும் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ம.தி.மு.க.வினர் வாக்களிப்பர் என பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். உலகக்கோப்பையை வென்ற நமது இந்திய அணிக்கு அறிவித்துள்ள பரிசுத் தொகையை வழங்க அனுமதி பெற்றுள்ள போதிலும் அதிகக் கெடுபிடிகள் தருவதை அவர் சுட்டிக் காண்பித்தார்.

பாதுகாப்பான இணையத்தளத்தை எப்படி அறிந்து கொள்ளலாம்!

குறிப்பாக எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும் இடத்தில் https:// என்று இருந்தால் அது பாதுகாப்பானது. 

இதன் உறுதியான, பாதுகாப்பான நிலையில் நம்பிக்கை வைத்து தகவல்களைத் தரலாம். இன்னொரு வழியும் உள்ளது. http://www.google.com/safebrowsing/diagnostic?site=“ ” என டைப் செய்து மேற்கோள் குறிகளுக்கிடையே அந்தக் குறியீடுகள் இல்லாமல், அந்த தளத்தின் முகவரி கொடுத்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் தரவும். 

அந்த தளம் குறித்த தகவல்கள், அதன் தன்மை குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கடந்த 60 அல்லது 90 நாட்களில், அந்த தளத்தினை கூகுள் நிறுவனம் சென்று வந்தது எனவும், எந்த வித கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்பினை அது பரவவிடவில்லை எனவும் சான்றிதழ் கிடைக்கும். 

மோசமான தளமாக இருந்தால், அதன் தன்மை குறித்து தகவல் இருக்கும். அருகே தினமலர் இணைய தளம் குறித்து கேட்டதற்குக் கிடைத்த பதிலைப் பார்க்கலாம்

source:CNN

ஏப்ரல் 07, 2011

காட்டுமன்னார்கோவிலுக்கு துணை ராணுவ படை வருகை

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப் படையினர் 84 பேர் வந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 216 ஓட்டு சாவடிகள் உள்ளது. வரும் தேர்தலில் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கமாண்டர் உமைத் கான் தலைமையில் 84 பேர் பாதுகாப்புப் பணிக்கு வந்துள்ளனர். இவர்கள் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீ முஷ்ணம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதிக்குட்பட்ட முக்கிய நகரங்களில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும் துணை ராணுவத்தினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை, ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல இடங்களில் துணை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் வலம் வர துவங்கியுள்ளதால் பரபரப்படைந்துள்ளது.
-DM

ஜஹாங்கீர் ஓவியம்: ரூ.10 கோடிக்கு ஏலம்

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் ஓவியம் லண்டனில் செவ்வாய்க்கிழமை ரூ.10 கோடிக்கு ஏலம் போனது.


17-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் முழு உருவ ஓவியம் லண்டனில் போன்ஹாம்ஸில் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது. தங்க சிம்மாசனத்தில் உலக உருண்டையை கையில் ஏந்தியவாறு ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற ஓவியர் அபுல் உசேனால் 1617-ல் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்திய இஸ்லாமிய கலை அமைப்பின் தலைவரான அலிஸ் பெய்லி இந்த ஓவியம் பற்றிக் கூறுகையில், இந்த ஓவியத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடமுடியாது என்று குறிப்பிட்டார். இந்த ஓவியத்துடன் முகலாயர் காலத்திய விலைமதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல் ஒன்றும் ஏலம் விடப்பட்டது.