கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் தற்பொழுது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 100 சதவீத களசரிபார்ப்பு பணி மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கான விபரங்கள் வீடு வீடாக சென்று பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6, பெயர் நீக்குவதற்கான படிவம்-7 மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவம்-8 ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்படி படிவங்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் மேலும் தேவைப்படும் எனில் அதனை சரிசெய்து கையொப்பம் பெற களப்பணியாளர்கள் வீடுதோறும் வருகை புரிந்து வருகின்றனர். எனவே அவ்வாறு வரும் களப்பணியாளர்களிடம் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், இருப்பிடம் மற்றும் வயதிற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை ஒப்படைத்து தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம பெற உரிய ஒத்துழைப்பினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...