லண்டன்:பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் எம்.பி என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஸபானா மஹ்மூத் பெற்றுள்ளார்.
பிரிட்டனில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸபானா பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தொழிலாளர் கட்சியின்(லேபர் பார்டி) சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர்.
27 வயதான ஸபானா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற வழக்கறிஞராவார். லேபர் கட்சியின் தலைவர்களில் ஒருவரின் மகளாவார் இவர். இம்முறை பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த பலரும் வெற்றிப் பெற்றுள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியின் ப்ரீதி பட்டேல், லேபர் கட்சியின் வலேரிய வாசு, அவரது சகோதரர் கீத் வாசு ஆகியோரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த எம்.பிக்களின் எண்ணிக்கை இம்முறை 15 க்கும் அதிகமாகும். ஸபானாவுடன் லேபர் கட்சியின் பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த வழக்கறிஞர் யாஸ்மின் குரைஷி மற்றும் ருஷானர அலி ஆகியோரும் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள முஸ்லிம்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
மே 08, 2010
இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஸபானா மஹ்மூத் பிரிட்டனின் முதல் முஸ்லிம் எம்.பி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...