Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 11, 2010

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! : வாகனங்களுக்கு பயன்படுத்துவது அதிகரிப்பு

கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சி யம் காரணமாக ஆட்டோக்களில் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தி வருவதால் காஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பெருகி வரும் வாகனங்களால் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள் நாட்டில் கிடைக்கக் கூடிய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யாததால் எண்ணெய் வள நாடுகளிடமிருந்து எரிபொருள் கொள்முதல் செய்யப் படுகிறது. இதனால் எரிபொருள் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஒரு லிட்டர் 52 ரூபாய் கொடுத்து போடும் பெட்ரோலில் அதிகபட்சமாக 20 கி.மீ., ஓட்டுவது பெரிய விஷயம். இதனால் குறைந்த செலவில் காஸ் மூலம் வாகனங்கள் இயக்கும் முறை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கார்களில் மட்டும் இயக்கி வந்த காஸ் தற்போது எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சாலையில் வலம் வரத் துவங்கியுள்ளன. எல்.பி.ஜி., என முத்திரையிட்ட ஆட்டோக்கள் தினமும் ஏராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு காஸ் நிரப்புவதற்கான பங்க் கடலூர், புதுச்சேரியில் இல்லை.

கடலூர் மாவட்டத்திலேயே சிதம்பரத்தில் மட்டுமே காஸ் நிரப்பும் பங்கு உள்ளது. கார் போன்ற வாகனங்கள் தொலை தூரம் செல் வதால் சென்னையிலோ அல்லது கிடைக்கின்ற இடத்திலோ காஸ் நிரப்பிக் கொள்கின்றனர். ஆனால் ஆட்டோக்கள் அப்படியல்ல. கடலூரில் பதிவு செய் யப்படும் ஆட்டோ கடலூர் ஸ்டாண்டில் தான் ஓட வேண்டும்.பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் காஸ் மூலம் இயக்கினால் கூடுதல் லாபம் கிடைக்கும் என ஆட்டோ டிரைவர்கள் கருதுகின்றனர். கடலூரில் காஸ் நிரப் பும் பங்க் இல்லாததால் தவித்து வந்த ஆட்டோ டிரைவர்கள் மாற்று வழியில் காஸ் நிரப்பி இரட் டிப்பு லாபம் ஈட்டுகின்றனர்.அரசு மானிய விலையில் கொடுக்கும் வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து காஸ் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் கொடுத்து ஆட் டோ சிலிண்டரில் மாற்றிக் கொள்கின்றனர். இந்த சிலிண்டர் ஒன்றுக்கு 400 கி.மீ., வரை செல்ல முடியும். அதன்படி ஒரு கி.மீ., செல்ல 80 பைசா முதல் 90 பைசா வரைதான் எரிபொருள் செலவு அடக்கமாகிறது. இதற்காக பல இடங்களில் காஸ் ஆட்டோவை இயக்க வீட்டு உபயோக சிலிண்டரை 500 ரூபாய் வரை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் தட் டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை மாவட்ட, வட்ட வழங்கல் அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த தவறான முன் உதாரணத்தை கட் டுப்படுத்த அதிகாரிகள் முன் வரவேண்டும்.

காஸ் ஏஜன்சி கேட்டு பெற வேண்டும்:

இது குறித்து காஸ் ஆட்டோ, கார் பதிவு செய்யும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில்

'புதிய எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. ஆனால் கடலூரில் காஸ் நிரப்பும் பங்க் இல்லை. இருப்பினும் பெட்ரோலிலும் இயங்கும் என்பதால் வாகனப் பதிவை நிறுத்த முடியாது. கோவை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட காஸ் நிரப்பும் பங்க் வருவதற்கு முன்பே காஸ் மூலம் இயங்கும் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனால் வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் பங்க்குகளை அமைக்குமாறு கடலூர் மக்கள் வலியுறுத்தி பெற வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...