Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 08, 2010

1992 லிருந்து நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளை மறுவிசாரணை செய்யவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

1992லிருந்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளை மறுவிசாரணை செய்யவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.துத் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'மாலேகான் குண்டு வெடிப்பில் ஹிந்துத்வா சக்திகளின் சதி வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து அபினவ்பாரத் என்ற ஹிந்துத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி புரோகித் மற்றும் பெண் தீவிரவாதி பிரக்யாசிங் ஆகியோர் கைதுச் செய்யப்பட்டார்கள்.மகாராஷ்ட்ரா மற்றும் உ.பியில் பல்வேறு குண்டுவெடிப்புகளிலும் சங்க பரிவார் கும்பல் ஈடுபட்டன. தமிழகத்தில் தென்காசியில் RSSஅலுவலக குண்டுவெடிப்பிலும் சங்கபரிவார் கும்பலே ஈடுபட்டு இருந்தனர்.இந்த குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஆரம்பத்தில் முஸ்லிம்களே குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டனர். பின்னர் ஹேமந்த் கார்கரே போன்ற நேர்மையான அதிகாரிகளால் சங்க்பரிவார்களின் தொடர்பு வெளிப்பட்டது.அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் ஆரம்பத்தில் முஸ்லிம்களே குற்றம் சுமத்தப்பட்டார்கள். தற்போது சங்க பரிவார்களின் சூழ்ச்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் ஹைதராபாத்> சம்ஜவ்தா> கோவா போன்ற குண்டுவெடிப்புகளிலும் சங்க்பரிவார் கும்பலின் தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.தீவிரவாதத்தை கட்டுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதிலும் தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் எந்த தீவீரவாத செயல்களுக்கும் முஸ்லிம்களையே குற்றப் பரம்பரையாக சித்தரித்து அதே கோணத்தில் விசாரனை செய்யப்படுவதும், இதனால் உண்மை குற்றவாளிகளை கண்டு கொள்ளாமல் விடப்படுவதுமே ஆகும்.எனவே பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா 1992க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளையும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சுதந்திரமான ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.இத்தகைய விசாரணை தீவிரவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொண்டுவருவதோடு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளையும் சரிசெய்ய வழிவகுக்கும்.தற்போது 5 குண்டு வெடிப்புகளுக்கிடையே உள்ள தொடர்பு வெளிப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் தீவிரவாதத்தை கட்டுபடுத்த எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளுடன் இத்தகையதொரு விசாரனை கமிஷனையும் அமைக்க வேண்டும் என்று பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது'.என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நன்றி:பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...