Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 30, 2010

உயிரை இழக்க நேரிடும் உழைப்பு உனக்கு

வெளிநாட்டில், குறிப்பாக அரபு நாட்டில் ஆடுமேய்ப்பது, பாலை வெயி லில் சாலை போடுவது, அரபி வீட்டில் அடுப்படி நெருப்பில் சமைப்பது, வீட்டு குழந்தைளுக்கு மலம் கழுவதுதான் காலமெல்லாம் உன் கதியானது. இதுவே உன் வாழ்க்கை விதியானது.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நீ அரபு நாட்டு அடிமை.

ஆண்டுக்கொருமுறை பரோ ல் வரும் அரபு நாட்டு ஆயுள் கைதி.
இது உன் வெளிநாட்டு வாழ்க்கை நிலை என்றால் உன் உள்நாட்டு வாழ்க்கை நிலை என்ன?

உன் நாட்டில், உள் நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்ணும் சமுதாயமே !
ஈராடைக்கு மேலாய் எதுவுமில்லாத ஏதி சமுதாயமே!
கொத்தடிமைக் கூலியாய் படிப்பறிவில்லாத தற்குரியாய் குத்தப்படும் தீவிரவாதத்தின் முத்திரையாய்! கூறப்படும் பயங்கரவாதத்தின் மறுபெயராய்! குற்றப் பரம்பரையாய்!
கூனிக் குறுகி வாழும் என் சமுதாயமே!
வெட்ட வெளியே உன் கழிப்பறையாய் !
கூரை குடிசையே உன் குடியிருப்பாய் !
குழிவிழுந்த கன்னமாய் ! கூன் விழுந்த முதுகாய் !
வறுமையே வாழ்க்கையாய் !
வாடுவதே உன்பாடாய் !
காலம் கழிக்கும் என் சகோதரனே !
கலவரத் தீயில் கட்டு கட்டாக உன் சமுதாயம் மட்டும். கரிக்கட்டைகளாக சாகவும் சரியவும் காரணம் என்ன?
காக்கிச் சட்டை அணிந்த அந்த காவல் துறையிலும் நாட்டைக் காக்கும் இராணுவத் துறையிலும் நீ இல்லாததுதான். அனைத்துத் துறையிலும் நீ அறியாமல் ஒதுக்கப்படவும் ஓரங்கட்டப்படவும் காரணம் என்ன?

அதிகாரத்துறையில் நீ இல்லாததுதான்.வன்முறை வழக்கில் நீ வாழ்நாள் கைதியாகி உன் உயிர் சுவாசம் முடியம் வரை சிறைவாசம் அனுபவிக்கின்றாயே ஏன்?
அநீதி இழைக்கப்பட்ட உனக்கு நீதி கிடைக்காமலும் நீதி மன்றத்தில் உன் வழக்கு மட்டும் நிலுவையில் நிற்கவும் காரணம் என்ன? நீதித் துறையில் நீ இல்லாததுதான்.
ஒரு தலித் தாக்கப்படும் போது கொந்தளிக்கின்ற நாடாளுமன்றம் , ஒரு குஜராத்தில் உன் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 3000 பேர் கொளுத்தப்பட்ட விவகாரம், நாடாளுமன்றத்தில் ஒரு முணுமுணுப்பு கூட இல்லாமல் பிசுபிசுத்து போனது ஏன்?

இட ஒதுக்கீடு இல்லாததுதான். நாடாளுமன்றத்திற்கு உன் சமுதாயம் உரிய பிரதிநிதித் துவத்தில் செல்லாததுதான்.
இனியும் இந்த அவலமும் அவமானமும் வேண்டாமெனில் கல்வியிலும் இப்போது பட்டிய லிடப்பட்ட இத்தனை துறைகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில்,

விடுதலைப் போராளியே! வீரத் தியாகியே ! தீவுத் திடல் நோக்கி திரண்டுவா !இனி என் சமுதாயம் வீழ்வதற்கும் மாள்வதற்கும் இல்லை. இன்ஷா அல்லாஹ் ! வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உரிய உரிமை கொண்டது என்று முழங்கி ஜ‚லை 4, 2010 தீவுத் திடல் நோக்கி வந்திடுக.
உன் குடும்பம் குழந்தைகளுடன் ”போர் முரசு கொட்டும் புயலாய்!” ”ஆர்பரிக்கும் அலைகடலாய்!” உரிமைப் பேரணி மாநாட்டில் கலந்திடுக! என்று அன்புடன் அழைக்கின்றது டிஎன்டிஜே.”

வெண்முத்து சங்கு பெறுவதற்கு முங்க வேண்டும் ஆழ்கடல்.” ”உன் பத்து சதம் இடஒதுக்கீடு பெறுவதற்கு பொங்க வேண்டும் தீவுத் திடல்.”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...