Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 08, 2010

சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்: கீழ​ணையி​லி​ருந்து வீரா​ணத்​துக்கு தண்​ணீர் திறப்பு


சிதம்பரம்:
சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கோடைக்காலம் என்பதாலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் வீராணம் ஏரியில் கடந்த மார்ச் மாதம் முழுக்கொள்ளளவு (47.50அடி) நீர் தேக்கி வைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கோடைக்காலம் என்பதால் நீர்வரத்து குறைந்து தற்போது வீராணம் ஏரியின் நீர் மட்டம் 42 அடியானது. இது மேலும் குறைந்தால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் கீழணையிலிருந்து வியாழக்கிழமை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் விநாடிக்கு 1500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக திருச்சி, அரியலூர் பகுதியில் பெய்து வரும் பரவலான மழையால் கீழணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோடைக்காலத்தில் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுவது இதுவே முதல்முறையாகும்.விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியில் கூடுதலாக நீர் தேக்கி வைக்கப்படுவதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...