Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 21, 2010

முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர்- NSSO ஆய்வறிக்கை

முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறுகிறது.உயர்கல்வியில் முஸ்லிம்கள் பழங்குடி மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.மத்திய புள்ளிவிபரம் மற்று திட்ட அமுலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NSSO வெளியிட்டுள்ள அறிக்கையின் தலைப்பு, ’இந்தியாவில் கல்வி, 2007-08:பங்களிப்பும் செலவும்’ என்பதாகும்.இவ்வறிக்கை கூறுவதாவது: ’100 முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்றால் அவர்களில் 10 பேர் மட்டுமே உயர்வகுப்பு கல்வி பயில செல்கின்றனர். ஆனால் பழங்குடியினரில் 11 பேரும், அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினரில் 12 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 14 பேரும் செல்வதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது'.’இந்தியாவில் கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய சமூகம் என்பது வெளிப்படையான ரகசியம்’ என லோக் பரிஷத் என்ற அரசு சாரா நிறுவனத்தின் அர்ஷத் அஜ்மல் கூறுகிறார்.இவ்வறிக்கை மேலும் ஒரு உண்மையை தெரிவிக்கிறது. அது என்னவெனில் நகரபகுதியிலிலுள்ள முஸ்லிம் மாணவர்கள் 100 பேரில் 7 பேர்தான் உயர்வகுப்பு கல்விக்கு பயில செல்கின்றனர். ஆனால் இது கிராமப்பகுதியில் 100க்கு 12 ஆகும்.இதற்கு என்னகாரணம் அஜ்மல் கூறுகிறார், "நகரப்பகுதியில் முஸ்லிம்கள் தொழிலாளிகளாகவும், ரிக்‌ஷா ஓட்டுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதே கடினமாக உள்ளது. இந்நிலையில் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க பள்ளிக்கூடம் அனுப்புவது கடினம்" என்றார்.மேலும் அவர் தெரிவிக்கையில், "கல்வியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கட்டாயமாகும். ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை அமுல்படுத்த வேண்டும்". என்றார்.கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்ததாக கல்வியில் நல்லநிலையில் உள்ளனர். இவ்வாய்வு கடந்த ஜூலை 2007 ஆம் ஆண்டு முதல் ஜூன் 2008 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டதாகும்.இந்த ஆய்வு 4,45,960 நபர்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 63,318 நகரப்பகுதி குடும்பங்களையும், 37,263 கிராமப்புற குடும்பங்களையும் சார்ந்தவர்கள். 7,953 கிராமங்கள், 4,682 நகர ஒன்றியம் ஆகியவற்றில் நடத்தப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...