Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 02, 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளிடம் சி.பி.ஐ விசாரணை



நாசிக்:கடந்த 2007 ஆம் ஆண்டு மே18 ஆம் நாள் ஹைதராபாத்திலிலுள்ள புகழ்பெற்ற மக்கா மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ வேளையில் குண்டுவெடித்து 9 பேர் கொல்லப்பட்டனர்.இக்குண்டு வெடிப்புத் தொடர்பாக விசாரணை செய்து வரும் சிபிஐ குழு, மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளிகளிடம் விசாரணை செய்ய நாசிக் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில் மலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பில் சூத்திரதாரிகளாக செயல்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான அபினவ் பாரத்தின் கர்னல் பிரசாத் புரோகித், பெண் தீவிரவாதி சன்னியாசினி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட குற்றவாளிகள் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஹைதராபாத்திலிருந்து வந்த சி.பி.ஐ குழுவினர் ஏப்ரல் 30 லிருந்து மே5 வரை விசாரணை மேற்க்கொள்வர். புரோகித் சிறையிலிருந்தாலும், ப்ரக்யா சிங் நாசிக்கிலிலுள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார்.ஹைதராபாத் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஹிந்துத்துவா தீவிரவாதி ராமாஜி கல்சங்க்ராவுக்கும், சந்தீப் டாங்கேவுக்குமிடையேயான செல்ஃபோன் உரையாடல் புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மாலேகான் குண்டு வெடிப்புக்கும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கும் இடையே இரு குழுக்களும் பயன்படுத்திய சிம் கார்டுகளும் ஒரே இடத்தில் வாங்கப்பட்டவை போன்ற ஒற்றுமைகள் இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவான சபாரி மஸ்ஜித் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி:டைம்ஸ் ஆஃப்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...