Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 24, 2010

துடிக்​காத துப்​பாக்​கி​கள்!



என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெரிக்காவுக்கு உணர்த்​தி​விட்​டது.​​ஆப்​கா​னிஸ்​தா​னில் கடந்த சில ஆண்​டு​க​ளா​கவே தங்கி சண்டை போட்டு​வ​ரும் அமெ​ரிக்​கா​வுக்கு,​​ இந்​தத் தலி​பான்​களை நம்​மால் அடக்​கவே முடியவில்லையே ஏன்? என்ற கேள்வி மண்​டை​யைக் குடைந்து கொண்​டி​ருந்​தது.​​அமெ​ரிக்க ராணு​வத்​தின் ஆய்​வுப் பிரிவு களத்​தில் சென்று செய்த சில ஆய்​வு​க​ளுக்​குப் பிற​கு​தான் கோளாறு எங்கே என்று தெரி​ய​வந்​தது.​​


அமெ​ரிக்கா இப்​போது எம்-​4 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​து​கி​றது.​ இது மிக​வும் நவீ​ன​மான துப்​பாக்கி என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.​ 5.56 மில்லி மீட்​டர் குறுக்​க​ள​வுள்ள குண்​டு​கள் இதில் பயன்படுத்தப்படுகின்​றன.​ ​​வியட்​நாம் போரில் பயன்​ப​டுத்​திய எம்-​16 ரக துப்​பாக்​கியை மேம்​ப​டுத்தி,​​ நவீ​னப்​ப​டுத்​தி​ய​தன் மூலம்​தான் எம்-​4 உரு​வாக்​கப்​பட்​டது.​ அப்​ப​டி​யி​ருந்​தும் இது பயன் தரா​மல் இருப்​பது ஏன் என்று ஆய்​வுக்​குழு இப்​போது கண்​டு​பி​டித்​து​விட்​டது.​​தலி​பான்​கள் நவீன துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தா​மல்,​​ இன்​னும் பழைய​கால துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்​து​கின்​ற​னர்.​முதல் கார​ணம்,​புதிய துப்​பாக்​கி​க​ளுக்கு நிறைய செல​வ​ழிக்க வேண்டும்.​ அடுத்து,​​ பழைய துப்​பாக்​கி​க​ளைக் கையாண்ட அனு​ப​வம் தரும் நம்​பிக்கை கார​ண​மாக துப்​பாக்​கியை மாற்​றிக்​கொள்ள அவர்​கள் விரும்​ப​வில்லை.​ மூன்​றா​வ​தாக,​​ தங்​க​ளு​டைய எதி​ரி​களை அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்த பழைய துப்​பாக்​கி​களே தலிபான்களுக்​குப் போது​மா​ன​தாக இருக்​கின்​றன.​​


அமெ​ரிக்கா பயன்​ப​டுத்​தும் எம்.-​4 ரக நவீன துப்​பாக்​கி​கள் சில நிமி​ஷங்​க​ளுக்​கெல்​லாம் ஏரா​ள​மான குண்​டு​களை துரி​த​க​தி​யில் உமிழ்ந்துவிடு​கின்​றன.​ இந்​தத் துப்​பாக்கி வியட்​நா​மி​லும் ஈராக்​கி​லும் ஓர​ள​வுக்​குப் பலன் தந்​த​தற்​குக் கார​ணமே எதி​ரி​கள் நகர்ப்​பு​றங்​க​ளில்,​​ மிக அரு​கில் வந்து சிக்​கி​ய​து​தான்.​ வியட்​நா​மில் நக​ரங்​க​ளி​லும் காடு​க​ளி​லும் எதி​ரி​களை மிக நெருக்​க​மாக சந்​தித்து சுட்​ட​னர்.​ எனவே இந்​தத் துப்​பாக்​கி​க​ளின் கொல்​(லும்)​திறன் கூடு​த​லாக இருந்​தது.​​ஈராக்​கில் பாக்​தாத்,​​ ரமாடி,​​ பலூஜா போன்ற நக​ரங்​க​ளில்​தான் அமெரிக்கப் படை​கள் அதி​கம் சுட்​டன.​ அங்​கெல்​லாம் எதி​ரி​கள் மிக அரு​கில் வந்து துப்​பாக்​கிக் குண்​டு​களை வாங்​கிக் கொண்​ட​னர்.​​


ஆப்​கா​னிஸ்​தா​னமோ மலைப் பாங்​கான பகுதி.​ இங்கே தலி​பான்​க​ளைப் பார்த்து அமெ​ரிக்க வீரர்​கள் சுட்​ட​துமே அந்த குண்​டு​கள் சீறிப்​பாய்ந்​தா​லும் எதி​ரி​கள் இருக்​கு​மி​டம் அரு​கில் செல்​லும் போது வேகம் குறைந்து,​​ இலக்கி​லி​ருந்து விலகி தாக்​கு​வ​தால் தாக்​கு​த​லுக்கே வலு​வில்​லா​மல் போய்​வி​டு​கி​றது.​​தலி​பான்​கள் அமெ​ரிக்க வீரர்​கள் வரு​வ​தைக் கவ​னிக்​கா​மல் எங்​கா​வது பார்த்​துக் கொண்​டும்,​​ போய்க்​கொண்​டும் ​ இருந்​தா​லும் அமெ​ரிக்க துப்பாக்​கி​க​ளின் சத்​தம் அவர்​களை உஷார்​ப​டுத்​தி​வி​டு​கி​றது.​ அத்​து​டன் அந்த குண்​டு​கள் வலு​வில்​லா​மல் இருப்​ப​தால் சாதா​ரண தடுப்​பு​கள் மூலமே தலி​பான்​கள் அடி​ப​டா​மல் தப்பி விடு​கின்​ற​னர்.​


அதே சம​யம் அவர்​கள் வைத்​துள்ள பழ​மை​யான துப்​பாக்​கி​கள் 2,000 அடி முதல் 2,500 அடி வரை​யுள்ள இலக்​கு​க​ளைக்​கூட ஊடு​ரு​விச் செல்​லக்​கூ​டி​யவை.​ எனவே தலி​பான்​கள் திருப்​பிச்​சுட்​டால் அந்த குண்​டு​கள் அமெரிக்க வீரர்​கள் மீதும் அவர்​க​ளு​டன் செல்​லும் இதர வீரர்​கள் மீதும் பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்​ப​டுத்​து​கின்​றன.​​இந்த ஆய்வு கார​ண​மாக துப்​பாக்​கி​களை மாற்​றிக்​கொள்ள அமெ​ரிக்க ராணு​வத் தலைமை முடிவு செய்​தி​ருக்​கி​றது.​


அத்​து​டன் தன்​னு​டைய எல்லா படைப்​பி​ரி​வு​க​ளி​லும் குறி​பார்த்​துச் சுடும் திற​மை​யுள்ள வீரர்​கள் 10 அல்​லது 12 பேரை குழு​வாக நிய​மித்​துக் கொண்டு,​​ தலி​பான்​கள் பயன்​ப​டுத்​து​வ​தைப் போன்ற பழைய,​​ அதே சம​யம் வலு​வான துப்​பாக்​கி​களை அவர்​க​ளி​டம் தந்து தலி​பான்​க​ளுக்கு ஈடு கொடுக்க அமெ​ரிக்கா முடிவு செய்​தி​ருக்​கி​றது.​​ஆப்​கா​னிஸ்​தா​னர்​களை முத​லில் அடக்க முற்​பட்ட பிரிட்​டி​ஷார் ​(1832-1842) பிரெய்ன் பெஸ் ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தி​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​களோ ஜெசைல் பிளிண்ட்​லாக்ஸ் என்​கிற பழைய ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்தி அவர்​க​ளு​டைய தாக்​கு​தல்​களை முறி​ய​டித்​த​னர்.


​​1980-களில் சோவி​யத் யூனி​ய​னைச் சேர்ந்த ராணுவ வீரர்​கள் ஏ.கே.​ 47 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​திப் பார்த்​த​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​கள் இரண்​டா​வது உல​கப் போரில் பயன்​ப​டுத்​தப்​பட்ட லீ-​என்​ஃ​பீல்டு ரக துப்​பாக்​கி​க​ளைக் கொண்டே அவர்​களை முறி​ய​டித்​த​னர்.​ இந்த ரக துப்​பாக்​கி​யில் பெரிய லீவ​ரும் போல்​டும் இருக்​கும்.​​இப்​போது அமெ​ரிக்கா எம்.​4 ரக துப்​பாக்​கி​க​ளுக்​குப் பதி​லாக எம் 110 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்த முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ இவை 2,500 அடி தொலை​வு​வரை பாய்ந்து இலக்​கு​களை நாசப்​ப​டுத்​தும்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னிய தலி​பான்​கள் போர்த் திறத்​தைத் தங்​க​ளு​டைய மூதா​தை​யர்​க​ளி​ட​மி​ருந்து பெற்​றி​ருப்​ப​தால்,​​ காலத்​துக்​கேற்ற நவீன ரகங்​களை நாடா​மல்,​​ போர்க்​க​ளத்​துக்​கேற்ற நம்​ப​க​மான துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.


எது எப்படியோ மேலே சொன்னது போன்று என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறிவியல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெ​ரிக்​கா​வுக்கு உணர்த்​தி​விட்​டது.
நன்றி :தினமணி


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...