Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 20, 2010

கடலூரில் ரூ.25,000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை



கடலூரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.25,000 கோடி செலவில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சி.பி.சி.எல்.) தலைவர் பி.எம்.பன்சால், நிர்வாக இயக்குனர் கே.பாலச்சந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்...கடந்த ஆண்டில் இதுவரை கண்டிராத அளவு கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டதாலும், அதிக விலையுள்ள கச்சா எண்ணெயை சுத்திகரிக்க வேண்டிய கட்டாயத்தாலும் ரூ.397.28 கோடி நஷ்டம் ஏற்பட்டது.ஆனால், இந்த ஆண்டில் வரிக்கு பின் ரூ.603.22 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. 2009-2010ம் ஆண்டில் விற்பனை மதிப்பு ரூ.29,183.84 கோடியை எட்டியுள்ளது.அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.10,000 கோடி முதலீட்டில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.காவிரிப் படுகையில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ள சிதம்பரனார் ஜெட்டியில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதேபோல், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சுத்திகரிப்பு ஆலைக்கு ரூ.100 கோடி செலவில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.மணலி சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை கொண்டு வருவதற்காக எண்ணூருக்கு அருகே சொந்தமாக துறைமுக வசதிகளை நிறுவுவதற்கான திட்டத்தையும் ஆராய்ந்து வருகிறோம்.ரூ.1,200 கோடி முதலீட்டிலான இந்தத் திட்டம், ஒப்புதல் பெறப்பட்ட நாளில் இருந்து 36 மாதங்களில் நிறைவடையும்.கடலூரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.25,000 கோடி செலவில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.இதேபோல், ரூ.65 கோடி செலவில் மணலியில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை அமைக்கப்படும் என்றனர்.


Source: thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...