இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் இன்று(புதன்கிழமை) முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது– இருசக்கர வாகன ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மெயின்ரோடுகளிலும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் இன்று முதல் ஒருவாரத்துக்கு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கும், சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய உத்தரவுகள்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள் அபராதம் விதிக்கும் அதிகாரம் உடையவர்கள். முதல்முறையாக ஹெல்மெட் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம்(ஸ்பாட் பைன்) விதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஹெல்மெட் அணியாமல் சென்றால் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...