சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கலந்து கொள்வதற்காக அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினர் கையில் அ.தி.மு.க. கொடியுடன் குவிந்திருந்தனர்.
சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் வேட்பாளர் சந்திரகாசி மற்றும் கே.கே.கலைமணி, எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் துரை.மணிவேல், காட்டு மன்னார்கோவில் முருகுமாறன் உள்பட நிர்வாகிகள் அண்ணா சிலை, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அங்கிருந்து ஜெயங்கொண்டம் ரோடு வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தனர். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் சந்திரகாசி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. மாற்று வேட்பாளராக சந்திரகாசியின்
மனைவி வனிதா, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் புவனகிரி எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இளவழகன், அமரமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...