Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 23, 2014

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பீகார் மாநில மார்க்க அறிஞர்கள் போலீசாரால் விசாரணை-முஸ்லிம்கள் அதிர்ச்சி

விருத்தாசலம், மே.22-தமிழகத்தில் பணிபுரியும்பீகார் மாநில முஸ்லிம் மார்க்கஅறிஞர்கள் போலீசாரால்தீவிரவாதிகளாக விசாரணைசெய்வது தொடர் கதையாகிவருகிறது.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து வேப்பூர்செல்லும் சாலையில் உள்ள கணடம்குறிச்சி கிராமத்தில் 25முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவருகின்றனர். விவசாய கூலிகளான அவர்கள் ஐவேளைதொழுகைக்காக கூரைப் பள்ளிஒன்றை ஏற்படுத்தி அதில் பீகார்மாநிலத்தை சார்ந்த நஜ்முதீன்என்ற ஆலிமை இமாமாகபணியில் அமர்த்தியிருந்தனர்.

21-ம் தேதி சுபுஹுதொழுகை முடித்து விட்டுபள்ளிவாசல் முன்பு நின்றுகொண்டிருந்த இமாம் நஜ்முதீன்ஆலிமை ரோந்து சென்ற வேப்பூர்காவல் நிலைய போலீசார்அவரை விசாரணை செய்தபோது அவருக்கு தமிழ் தெரியாததால் காவல் நிலையத்திற்குஅழைத்துச் சென்று விட்டனர். தகவல்அறிந்து கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்செயலாளர் ஏ. சுக்கூர், விருத்தாசலம் வட்டார உலமாகள் சபைசெயலாளர் முஹம்மது உஸ்மான், வேப்பூர் பள்ளிவாசல் இமாம் ஷாகுல் ஹமீது, விருத்தாசலம் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் துணைத் தலைவர்ஷேக் பாதுஷா உள்ளிட்டோர்வேப்பூர் காவல் நிலையம் சென்றுசம்பந்தப்பட்ட போலீஸ்அதிகாரிகளை சந்தித்தனர்.பள்ளிவாசல் இமாம் என்றும்,ஒரு வருடத்திற்கு மேல் அவர்பணிபுரிவதாகவும் ஜமாஅத்தினர் கூறியும், அதனை ஏற்காமல்ஒரு பயங்கர குற்றவாளியைபோன்று அவரை நடத்தலாமா?என கேள்வி எழுப்பினர். மேலிடஉத்தரவுப்படியே தாங்கள்செய்வதாக காவல் துறையினர்குறிப்பிட்டனர்.உயர் அதிகாரிகளிடம்கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.ஷுக்கூர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக தேவைப்படும்போது ஆஜர்படுத்தப்ப படவேண்டும் என்ற நிபந்தனையோடு இமாம் நஜ்முதீன் ஆலிம் விடுவிக்கப்பட்டார். 

இதேபோன்று, விருத்தாசலம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசலின் முஅத்தீனாக வேலைசெய்து வரும் பீகார் மாநிலத்தைசார்ந்த இம்ரான் என்பவரும்காவல் துறையினரால் அழைத் துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பலத்த முயற்சிக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தமுஸ்லிம்கள் வேலை வாய்ப்புகிடைக்காமல்
வறுமையில்வாடுகின்றனர்.மார்க்க ஞானம் பெற்றஅவர்கள் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இமாம்களாகவும்,முஅத்தீன்களாகவும் பணிபுரிகின்றனர்.ஆனால், இப்போது காவல் துறையினர் அவர்களை குறிவைத்து கைது செய்வதும்,விசாரணை செய்வதும் முஸ்லிம்சமுதாயத்தினரிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
நன்றி:Lalpet Ahamed Ibnuthalabathy

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...