Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 20, 2014

16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே!

புதுடில்லி,  16ஆம் மக்களவைத் தேர்தலில் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத்துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது. 16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக்களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர்களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்களவையில் இடம் பெற் றிருந்தனர்.

 மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கவலை
தெரிவித் துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இமுஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில்: தேசிய அரசியலில் பா.ஜ.க. மிகப் பெரிய சக்தியாக உருவெ டுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப்பதவிக்கு பொருத்தமற்ற வர்களாக ஆக்கப்படுவார்கள் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...