இந்நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 70 பேர் கொண்ட கும்பல் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரிப்பது தெரியவந்தது. விசாரனையின்போது, அவர்கள் நியூயார்க் புறநகர் பகுதி காவல்துறை அதிகாரிகள் என்பது தெரியவந்தது. மேலும் பல, உயர் பதவிகளை வகிப்பவர்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஆபாசபடங்கள் சேமித்து வைத்திருந்த 600 லேப்டாப், மற்றும் பல ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன. குற்றத்தை தடுக்கும் உயரதிகாரிகளே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பது, அந்நாட்டு காவல்துறையின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...