Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2014

குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

வதோதரா: குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையின்போது வதோதரா ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மேற்கு ரயில்வேக்கு ரயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைகளை இந்துத்துவா தீவிரவாதிகள் நடத்தினர்.இதில் வதோதரா ரயில் நிலையத்தில் முகமது ஃமுபித் ஆலம் ஜமாலுதீன் என்பவர் கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ரயில்வே தீர்ப்பாயத்தில், ஜமாலுதீனின் பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “வதோதரா ரயில் நிலையத்தில் அஹ்மதாபாத்- வல்சத் பயணிகள் ரயிலுக்காக ஜமாலுதீன் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கலவரக்காரர்களால் அவர் கொலை செய்யப்பட்டார்.

பயணிகளை அசம்பாவித சம்பவங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது ரயில்வேயின் கடமை. ஆதலால், ரயில்வே சட்டத்தின்
124-ஆவது பிரிவு, 124(ஏ), 125, 123 சி (2) ஆகிய பிரிவுகளின் கீழ் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...