கொல்கத்தா: மத்தியில் நான் ஆட்சியில் இருந்திருந்தால் மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு இழுத்துச் செல்ல கூறியிருப்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். ஏற்கனவே மோடியை 'கழுதை' என்றும், 'மிஸ்டர்.வன்முறை' என்றும் கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில்;
மோடியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. நான் மட்டும் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால், மோடியின் இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு இழுத்துச் செல்ல உத்தரவிட்டிருப்பேன். மோடியின் பிரிவினைவாத அரசியல் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடியது. எக்காரணத்தைக் கொண்டும் மத்தியில் பாஜகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தரமாட்டோம்
என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...