கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக் கொண்டு வலம் வருகின்ற டாக்டர்களை இன்னும் கொஞ்ச காலம்தான் பார்க்க முடியும். அது மட்டுமல்ல... ஸ்டெதாஸ்கோப்பையே வருங்காலத்தில் மியூசியத்தில்தான் பார்க்க வேண்டியிருக்கும். இது மருத்துவ அறிவியல் நிகழ்த்தப் போகும் மாயாஜாலம்!
கால் நூற்றாண்டுக்கு முன்பு கிராமபோனில்தான் பாட்டுக் கேட்டோம். பிறகு ஆடியோ கேசட் வந்தது; அது போய் சி.டி. வந்தது; இப்போது எம்.பி. 3, எம்.பி.4 என தொழில்நுட்பம் எகிறிக் கொண்டிருக்கிறது. அது மாதிரியே மருத்துவ உபகரணங்களிலும் அப்டேட் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. குழாய் வடிவத்தில் இருக்கின்ற ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன் மாடலில் ஒரு நவீன ஸ்டெதாஸ்கோப்பை இங்கிலாந்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்றைய ஸ்டெதாஸ்கோப்பின் ஹிஸ்டரியைப் பார்த்து விடலாம்.
1816ல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் டாக்டர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள டாக்டர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.
1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள்
ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத்துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப்பினான். இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனையைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.
இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி. இதை அடிப்படையாக வைத்து 1819ல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன்பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843ல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது. ஸ்டெதாஸ்கோப்பின் முனையில் வட்டமாகவுள்ள 'டயாஃப்ரம்' இதய ஒலிகளைக் கிரகித்து அதோடு இணைந்த ரப்பர் குழாய்க்குள் அனுப்புகிறது.
அங்கு இருக்கும் காற்று, இதயஒலி அலைகளைப் பெருக்கி, ஒருங்கிணைத்து அனுப்புவதால் அந்த ஒலிகளைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. இதுதான் ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்படைத் தத்துவம். கடந்த 200 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் ராஜமரியாதையுடன் வலம் வந்துகொண்டிருக்கும் ஸ்டெதாஸ்கோப்புக்கு மாற்றாக இங்கிலாந்தில் 'ஜெனரல் எலக்ட்ரிக் ஹெல்த் கேர் சிஸ்டம்' எனும் நிறுவனம் 'விஸ்கேன்' (க்ஷிஷிநீணீஸீ ) என்கிற நவீன ஸ்டெதாஸ்கோப்பைத் தயாரித்துள்ளது. இது மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
“வௌவால்கள் பறப்பதற்குப் பயன்படுத்தும் டெக்னாலஜிதான் இதிலும் பயன்படுகிறது” என்கிறார் நிணி நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் இம்மெல்ட். “வௌவால்கள் இருட்டில் பறக்கும்போது எதிரில் ஏதேனும் தடை உள்ளதா என்று தெரிந்து கொள்ள, அல்ட்ரா சவுண்டை உண்டாக்கிக் காற்றில் அனுப்பும். வழியில் தடை இருந்தால் அந்த ஒலி எதிரொலித்துத் திரும்பும். அதை உணர்ந்து, வௌவால்கள் திசை மாறிப் பறக்கும். ஒலிக்குண்டான இந்த தனித்தன்மையை அடிப்படையாக வைத்து விஸ்கேனை உருவாக்கியுள்ளோம்.
'விஸ்கேன்' சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் அளவுக்குச் சிறியது. இது பேட்டரியில் இயங்குகிறது. ஸ்மார்ட் போன் மாடலில் இருக்கும் இந்தக் கருவியில் ஒரு சிறிய திரை மற்றும் கீ பேடு உள்ளது. ஹேண்ட் மைக் அளவில் 'டிரான்ஸ்டூசர்' (ஜிக்ஷீணீஸீsபீuநீமீக்ஷீ) எனும் கருவி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முனையை மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது இது கேளாஒலி அலைகளை உற்பத்தி செய்து, இதயத்துக்கு அனுப்புகிறது. அவை இதயத்தில் மோதி, எதிரொலித்து வருவதை உள் வாங்கி, 3டி படங்களாக திரையில் பதிவு செய்கிறது. இதன் மூலம் இதயம் இயங்குவதை திரையில் பார்க்க முடியும். இதயத்துடிப்பு எண்ணிக்கை, லயம், இதய வால்வுக் கோளாறுகள், இதயத்தில் ரத்த ஓட்டம் போன்றவற்றை அடுத்த நிமிடத்தில் அறியலாம்.
டாக்டர்கள் இதய ஒலிகளைக் காதால் கேட்பதில்கூட சந்தேகம் வரலாம். இதில் சந்தேகம் என்பதே வராது. நோய்க்கணிப்பு மிகச் சரியாக இருக்கும். இக்கருவியைப் பயன்படுத்தி நுரையீரல் நோய்களையும் வயிறு நோய்களையும்கூட அறியலாம். தற்போதைய ஸ்டெதாஸ்கோப் முனை போல் டிரான்ஸ்டூசரின் முனையை மாற்றி அமைத்துவிட்டால், இது ஒரு கையடக்க ஸ்டெதாஸ்கோப் போல் காட்சி தரும்” என்கிறார் அவர். கிரேட்!
source:Dinakaran

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...