Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 01, 2014

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு குறித்து டி.ஜி.பி.ராமானுஜம் பேட்டி!

இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலி, பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி வரை செல்லும் பயணிகள் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ஆவது பிளாட்பாரத்திற்கு வந்த போது ரயிலின் எஸ்.4 மற்றும் எஸ்.5 பெட்டிகளில் 2 குண்டுகள் வெடித்தன. இதுகுறித்து சென்னை டிஜிபி  ராமனுஜம் கூறியதாவது:

வெடிகுண்டு நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் களத்தில் உள்ளனர். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலக போலீசார் மற்றும் மூத்த அதிகாரி வந்துள்ளனர். எந்த முழுமையான தகவலும் இல்லை. இப்போதே இதுகுறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. ரயில் தாமதமாக வந்துள்ளது இதற்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இருக்கலாம். ஒருமணி நேரத்திற்கும் மேல் இரயில் தாமதமாக வந்துள்ளது. எனவே இது வேறு எங்காவது வெடிக்கச் செய்யும் திட்டம் இருந்திருக்கலாம் என்று டி.ஜி.பி. ராமானுஜம் பதிலளித்தார்.

அதாவது காலை 5.40க்கு வர வேண்டிய 7.05 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படைப்பிரிவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். குண்டுவெடித்த பெட்டிகள் மட்டுமில்லாமல் எல்லா பெட்டிகளிலும் தீவிர சோதனை நடந்துவருகின்றது. மீண்டும் ஒரு முறை கவுஹார்த்தி எக்ஸ்பிரஸ் ரயில் சோதனையிடப்படும். குண்டுவெடித்த 2 பெட்டிகளை தவிர்த்து மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் இயக்கப்படும். குண்டுகள் வெடித்த 2 பெட்டிகளும் மேற்கொண்டு விசாரணைக்கு தேவைப்படுகின்றன. எந்த மாதிரியான வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. யார் செய்தார்கள், என்ன நோக்கம் என்பதெல்லாம் தெரியவில்லை. அனைத்து தகவல்களும் விசாரணைக்கு பிறகு தெரிவிக்கப்படும்
என்று ராமானுஜம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...