Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 22, 2013

துருக்கி: 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜாப் அணிய சுதந்திரம்!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டுப் பெண்கள் தலைமுக்காடுடன் கூடிய ஹிஜாப் எனப்படும் பூரண ஆடை அணிய, கடந்த 14 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, ஹிஜாப் அணிய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலை முக்காடு அணிந்து வந்து துருக்கி நாடாளுமன்றத்தில் செயலாற்றினர். அவர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பெண்கள் தலைமுக்காடு அணிந்து வரத் தடையில்லை; விருப்பம் போல அணிந்து வரலாம் என்ற உரிமை அளிக்கப்படுவது பெண்ணுரிமைக்கும் மதசுதந்திரத்திற்கும் மதிப்பளிப்பதாக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்தளித்தனர். கடந்த 14 ஆண்டுகளாக ஹிஜாப் மற்றும் தலை முக்காடு அணிவதற்கு இருந்த தடை இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது. "இனி என் தலை முக்காட்டை நான் தொடர்ந்து அணிவேன்; நீக்க மாட்டேன் - என்னுடைய இந்த முடிவை எல்லோரும் வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார் துருக்கியின் நாடாளுமன்ற உறுப்பினரான கோனுல் பெகின் ஷகுல்பே என்கிற பெண். 20 ஆம் நூற்றாண்டில் இறுதியில் 1999 ஆம் ஆண்டு, அமெரிக்கத் துருக்கியரான மெர்வ் கவாக்சி என்னும் பெண்மணி துருக்கிய நாடாளுமன்றத்திற்கு தனது பதவியேற்புக்காக தலை முக்காடுடன் வந்த போது,அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் துருக்கியின் குடியுரிமையையும் அவர் இழக்க நேர்ந்தது.

அப்போதைய துருக்கி பிரதமர் புலண்ட் ஈசிவிட் தலை முக்காடு அணிவதற்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். "இந்தப் பெண் அவருக்குரிய இடத்திற்குச் செல்லட்டும்; இங்கிருந்து வெளியேறட்டும்" என்று தலை முக்காடு அணிந்திருந்த மெர்வ் கவாக்சியைப் பார்த்து அப்போது கூறப்பட்டது நினைவு கூரத்தக்கது. இச்சம்பவத்திற்குப் பின்னர் துருக்கியிலிருந்து வெளியேறிய கவாக்சி, பெண்களின் மத சுதந்திரத்திற்காகப் போராடினார்."முஸ்லிம் பெண்கள் தங்கள் நம்பிக்கைகளின் படி வாழும் சுதந்திரம்
வழங்கப்பட வேண்டும்" என்று அவர் போராடினார். குறிப்பாக, "ஹிஜாப்/தலை முக்காடு பற்றி அப்பெண் தான் முடிவு செய்யவேண்டுமே தவிர அரசாங்கமோ, மற்றவர்களோ முடிவு செய்யக் கூடாது" என்று அவர் வாதிட்டார். "முஸ்லிம்களோ, யூதர்களோ, சீக்கியர்களோ யாராயினும் அவரவர் மதநெறிப்படி ஆடை அணியும் சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் " என்று அவர் போராடினார்.

அந்த 14 ஆண்டுக்கால போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது எனலாம் துருக்கியின் தற்போதைய பிரதமர் ரசீப் தய்யிப் எர்துகான் கடந்த 2002 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்து பெண்கள் முன்னேற்றம், ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்த தனது அரசு பாடுபடும் என்று உறுதி அளித்திருந்தார். கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு, தலை முக்காடு மீதான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது பிரதமரின் மனைவி தலை முக்காடு அணிந்து வந்து. 'இது ஒரு வரலாற்றுத் தருணம்' என்று குறிப்பிட்டார். "மக்களின் குரலே இந்நாடாளுமன்றத்தின் குரல்"என்றார் எர்துகான். தலை முக்காடு அணிந்து வருபவர்களும், அவ்வாறு அணியாதவர்களும் இம்மன்ற உறுப்பினர்கள் என்ற அளவில் ஒரே மாதிரியாகவே நடத்தப்படுவர்"என்றார் அவர். 2006 ஆம் ஆண்டு துருக்கி பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 60% பெண்கள் தலை முக்காடு அணிவதற்கு ஆதரவாகவே கருத்துகளை வெளிப்படுத்தினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் எர்துகான் பதவிக்கு வந்தபின்னரே, பல்கலை கழகங்களில் பெண்கள் ஹிஜாப்/தலை முக்காடு அணிந்து வருவதற்கும் தடையில்லை என்று சொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது. "மாணவிகளின் மத நம்பிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடாது" என்றார் எர்துகான். நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களே தலை முக்காடு அணிந்து வந்த போதிலும், பெண் நீதிபதிகள், அரசு பெண் வழக்குரைஞர்கள், காவல் பெண்அதிகாரிகள், ராணுவ வீராங்கனைகள் ஆகியோருக்கான தலைமுக்காடு தடை இதுவரை நீக்கப்படவில்லை என்பதும் குறிக்கத்தக்கது.
source:Inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...