Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 28, 2013

மோடிக்கு எதிரான ஸாக்கியா ஜாஃப்ரியின் மனு தள்ளுபடி! ஸாக்கியா மேல்முறையீடு!

அஹ்மதாபாத்: குஜராத் இனப்படுகொலைகளை மோடி முன்னின்று நடத்தினார் என்று கூறப்பட்டும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையின் சூத்திரதாரியாக செயல்பட்டார் என்று வலுவான குற்றச்சாட்டு எழுந்தது. குஜராத் இனப்படுகொலையின்போது அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற கொடூரமான கூட்டுப் படுகொலை சம்பவத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் குல்பர்கா குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற தீ வைப்புத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இஹ்ஸான் ஜாஃப்ரி மிகக் கொடூரமான முறையில் ஹிந்துத்துவ ஃபாஸிஸ்டுகளால் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஃபாஸிஸ வன்முறையாளர்கள், தமது குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைத்த நிலையில், இஹ்ஸான் ஜாஃப்ரி பல காவல்துறை அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தொடர்பு கொண்டு தம்மைக் காப்பாற்றும்படி கேட்டும் யாரும் அவருக்கு உதவவில்லை. இந்தக் கூட்டுப்படுகொலையைத் தடுக்க காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பின்னணியில் கூட்டுப் படுகொலையின் போது நரேந்திர மோடி ஆற்றிய பங்கு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஐக்கியா ஜாஃப்ரி விசாரணை கோரியிருந்தார். கோத்ராவில் 59 கரசேவகர்கள் ரயிலில் எரித்துக் கொல்லப்பட்டதற்கு இந்துக்கள் பழி தீர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மோடி காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னதாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டும் குற்றம் சாட்டியிருந்தார். எனவே இனப்படுகொலையில் மோடிக்கு உள்ள நேரடிப் பங்கை வெளிக் கொண்டு வரக் கூடிய முக்கிய வழக்காக இந்த வழக்கு கருதப்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியை ஆராய மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ யின் முன்னாள் இயக்குனர் ஆர் கே ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த 2010 ஆம் ஆண்டு மோடியிடம் 9 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியது. அதன் பிறகு இது அளித்த அறிக்கையில், வழக்கு தொடுக்கும்
அளவுக்கு நரேந்திர மோடிக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று அநியாயமான நற்சான்றிதழை வழங்கியிருந்தது. மேலும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அளித்த சாட்சியத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்க மறுத்தது. இந்த வழக்கே செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் உந்துதலால் தொடுக்கப்பட்டது என்றும் அது கூறியிருந்தது. இந்த விசாரணை அறிக்கையை ஏற்று வழக்கை முடிப்பதாக அஹ்மதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யப் போவதாக கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...