கொள்ளுமேட்டில் கடந்த 16 நாட்களாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நியாய விலை கடை திறக்கபடாமல் இருந்தது.கடையை திறக்க ஊழியர்கள் எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் பொது மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் காட்டுமன்னார்குடி சேத்தியாதோப்பு,சிதம்பரம் செல்லும் வீராணம் ஏரிக்கரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது.அரசு இயந்திரத்தின் அலட்சியப்போக்கிற்கு சரியான பாடம் புகுத்தியுள்ளனர் கொள்ளுமேட்டுவாசிகள்.
படங்கள்:சைபுல்லா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...