Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 28, 2013

நடுராத்திரியில் ரெய்டு செய்து ஜம்மு காஷிமீர் கிரிக்கெட் வீரர்களை அவமானப்படுத்திய போலீஸ்!

ஜம்மு காஷ்மீர் அணி ஐதராபாத் அணியுடன் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடியது. அன்று கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுதும் திருக்கோயில்களுக்கு மக்கள் சென்று கேக்குகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்ட நேரத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளது ஜம்முபோலீஸ்.
புதனன்று ஐதராபாத் உடனான அந்த ரஞ்சி போட்டியின் இறுதி நாள், இந்த ஆண்டு ஜம்மு அணி சிறப்பாக ஆடி வருகிறது. மறுநாள் ஆட்டத்திற்கான கடுமையான ஆயத்தங்களைச் செய்துவிட்டு வீரர்கள் விடுதியில் நன்றாக உறங்கிவிட்டனர்.

அப்போது திடீரென ஆயுதங்களுடன் போலீஸ் கும்பல் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைக்குள் புகுந்து அடையாள அட்டையை எடு, அது இது என்று ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு அவர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல் விசாரணை செய்துள்ளது ஜம்மு போலீஸ். 
இது குறித்து ஜம்மு காஷ்மீர் அணி வீரர் சமியுல்லா பெய்க் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"இரவு முழுதும் தூங்கமுடியவில்லை. நடு இரவில் போலீஸ் எங்கள் அறைக்கு வந்து சோதனை நடத்தினர். நடு ராத்திரி சுமார் 1.15 மணிக்கு வந்த போலீஸ் சுமார் ஒன்றரை மணி நேரம் கேள்வி மேல் கேட்டு எங்கள் அறையை புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றது.

நாங்கள் அறையை தாழிடவில்லை. நாங்கள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள்தானே. ஆனாலும் நடு ராத்திரியில் திபு திபுவென ஆயுததாரிகளாக போலீஸ் அறைக்குள் நுழைந்தது இப்போதும் குலை நடுங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரஞ்சி காலிறுதிக்குள் முதன் முதலாக நுழைந்து வரலாறு படைக்கும் முயற்சியுடன் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது.

யார் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது ஜம்மு போலீசுக்கு தெரியாதா என்ன? இதுபோன்ற ஒரு கேவலமான ரெய்டை நடத்திவிட்டு பதில் கேட்டால் ஜம்மு ஐ.ஜி.ராஜேஷ்குமார் கூறுவது கேவலத்தின் உச்சக்கட்டம்:இது ஒரு ரொடீன் செக், சோதனை நடத்தியவர்களுக்கு அவர்கள் ரஞ்சி வீரர்கள் என்று தெரியாது. விதிமுறைகளின் படி தேடுதல் வேட்டை நடத்தினோம். இந்தச் சோதனை இங்கு மட்டுமல்ல நகரம் முழுதும் நடத்தப்பட்டுள்ளது. என்று கூறுகிறார்.

இது குறித்தும் தனது ஃபேஸ்புக்கில் கருத்து கூறிய வீரர் சமியுல்லா பெய்க், "வேண்டுமென்றே நடத்தப்பட்ட இழிவான ரெய்டா அல்லது ரொடீன் செக்கா என்பது பற்றி கவலையில்லை, விளையாட்டு வீரர்களை இதுபோன்று நடத்துவது முறையல்ல என்றே கூறுகிறேன்" என்றார்.

பயிற்சியாளர் அப்துல் கயும் கூறுகையில், ரெய்டு நடத்திய நேரம்தான் பிரச்சனை" என்று அடக்கி வாசித்துள்ளார்.

போலீஸ் தங்கள் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் நுழையலாம், என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் ஜம்மு காஷ்மீரில் நிலவுகிறது என்பதற்கு பல சாட்சியங்களில் மிகவும் பருமையான சாட்சியமாக இந்த கேவலமான ரெய்டு அமைந்துள்ளது.

வீரர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் நிச்சயம் ஜம்மு போலீஸ் தகவல் திரட்டியிருக்கும், அப்படியிருக்கையில் திடீரென விடுதிக்குள் புகுந்து மறுநாள் இறுதி நாள் ஆட்டத்தில் பங்கேற்கும் வீரர்களை ஏதோ பயங்கரவாதிகள் போல் நடத்துவது என்ன அராஜகம்?

ஜம்மு காஷ்மீர் பற்றி கேள்வி கேட்பாரற்று போய்க்கொண்டிருக்கிறது என்றுதான் இதுபோன்ற கேவலமான அடக்கு முறை சம்பவங்கள் நம்மை எண்ணத் தூண்டுகின்றன.

இந்தியாவின் ஒரு பகுதியே ஜம்மு காஷ்மீர் என்று உரிமை கொண்டாடும் இந்தியா தனது ராணுவம் போலீஸ் ஆகியவற்றைக் கொண்டு அங்கு செய்து வரும் அராஜகங்கள் அது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதையே
எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

நாட்டை பிரதிநிதித்துவம், செய்யும், நாளை அங்கிருந்து இந்திய அணிக்காக எழுச்சியுறும் கிரிக்கெட் வீரர்களுக்கே ஜம்மு போலீஸின் கையில் இந்த வித டிரீட்மென்ட் என்றால் அங்கு வாழும் சாதாரண முஸலிம் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அடக்குமுறைகளை நினைத்தால் எங்கோ இருக்கும் நமக்குமே குலை நடுங்கவே செய்கிறது.
-thanks:http://tamil.webdunia.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...