நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?
கூலித் தொழிலாளியாகவோ...
இறைச்சிக் கடைக்காரராகவோ...
நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ...
கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ...
தோல் பதனிடும் தொழிலாளியாகவோ...
பெட்டிக்கடை நடத்துபவராகவோ...
குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?
சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?
ஒட்டகம் மேய்த்தல்...
சாலை போடுதல்...
கழிவுகளைச் சுத்தம் செய்தல்...
உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்...
தனியாருக்குக் கார் ஓட்டுதல்...
வீடுகளைச் சுத்தம் செய்தல்...
சமையல் வேலை செய்தல்...
மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?
இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா?
உரிமையை வெல்ல உரிமையுடன் அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
கடலூர் மாவட்டம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...