Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 05, 2013

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து உத்தரவின் பேரில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முக்கிய சந்திப்புகளில் நின்று 4,225 வாகனங்களை தணிக்கை செய்தனர்.

இதில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தல், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை வாகனத்தில் பொருத்தி இருத்தல், அதிக பிரகாசமான முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டது, சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 277 வாகன ஓட்டிகளின் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து கூறியதாவது:–

ரூ.17½ லட்சம் அபராதம்: கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை செய்தனர். இதில் அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றி சென்றது தொடர்பாக 61 வாகன ஓட்டிகள் மீதும், பக்கவாட்டு கண்ணாடிகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் பேப்பர்களை ஒட்டிவைத்தது
தொடர்பாக 7 வாகன ஓட்டிகள் மீதும், நம்பர் பிளேட்டுகளில் சட்டத்துக்கு புறம்பாக எழுதி வைத்தது தொடர்பாக 26 வழக்குகளும் என மொத்தம் 277 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆம்னி பஸ்களில் அவசர கால வழி இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சாலை வரி செலுத்தாத பிறமாநில வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து வரி வசூல் செய்தவகையிலும், சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்த வகையிலும் ரூ.17 லட்சத்து 63 ஆயிரத்து 874 ரூபாய் சம்பவ இடத்திலேயே வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற 11 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 10 ஓட்டுநர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கடலூர் மாவட்டத்தில் தற்போது கடலூரில் வட்டார போக்குவரத்து தலைமை அலுவலகம், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய இடங்களில் 3 கிளை அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்கள் உள்ளன. தற்போது பண்ருட்டி தாலுகாவில் மேலும் ஒரு வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அரசாணை வரப்பெற்றதும் புதிய அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும். புதிய கிளை அலுவலகத்தையும் சேர்த்தால் கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலங்களின் எண்ணிக்கை 3–ல் இருந்து 4 ஆக அதிகரிக்கும்.
-dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...