தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு ஆட்களை
தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 14–ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடைய 19 முதல் 40 வயதுக்குட் பட்டவர்கள் தங்கள் மதிப்பெண் சான்று நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என்று
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி எகசானலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...