Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 12, 2012

மியன்மாரில் முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரை, ஊரடங்குச் சட்டம் அமுல்

நன்றி:மீள்பார்வை

மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினில் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அங்கு அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரகின் மாநிலத்தில் நீடிக்கும் கலவரத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக் கணக்கான சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் பெளத்த பெண் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் சென்ற பஸ் ஒன்று தாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த ரகின் மாநிலத்தில் ஜனாதிபதி தெயின் செயின் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். பிராந்திய நிர்வாகம் இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதோடு மாநில தலைநகரான சித்வா மற்றும் ஏனைய மூன்று நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடி நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மஜ்டோவில் ஆரம்பமான கலவரம் தொடர்ந்து தலைநகர் சித்வா மற்றும் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ளது. இதன்போது முஸ்லிம்களின் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

 பங்களாதேஷின் எல்லைப்புற மாநிலமான ரகினில் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்ற நிலை நீடிக்கிறது. இங்கு ரகின் இன
பெளத்தர்களே பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...