காட்டுமன்னார்கோவில்:லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம், வீராணம் ஏரிக்கரையில் குப்பைகளைக் கொட்டி எரிப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதுடன், சுற்றுச்‹ழல் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள லால்பேட்டை பேரூராட்சியில், 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இப்பேரூராட்சியில் அகற்றப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டுவதற்காக, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலையோரத்தில்ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், பேரூராட்சியின் குப்பைகளை சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் மெயின் ரோடு ஓரத்தில் கொட்டி வந்தனர். எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் இச் சாலையில் ஓரத்தில் கொட்டிய குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வந்தனர். இதனால் கரும்புகை சாலையில் சூழ்ந்து, எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அங்கு குப்பைகள் எரிப்பது நிறுத்தப்பட்டு, தற்போது வீராணம் ஏரிக்கரையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள், காற்றில் பறந்து ஏரியில் விழுகின்றன.
இந்நிலையில், ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பைகளையும் அவ்வப்போது தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து, விபத்து ஏற்படும்
நிலை உருவாகியுள்ளது. எனவே மக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் குப்பையை கொட்டுவதற்கும் சுற்றுச்‹ழலுக்கு கேடில்லாத வகையில் குப்பைகளை அழிக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...