ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என, கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பரஸ்பரம் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம், உத்கல் கிறிஸ்தவ கவுன்சில், அபோஸ்தல் தேவாலய கூட்டமைப்பு போன்ற மத அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஓரினச் சேர்க்கை குற்றம்தான் என உச்ச நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
'ஓரினச் சேர்க்கை குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க முடியும்' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
மேலும், சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து அரசே முடிவு செய்ய
வேண்டும் என்றும் உச்ச நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...