Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2013

சிதம்பரம் பகுதியில் பால் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சிதம்பரம் பகுதியில் மொத்தமாக பால் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கலப்பட பால் மற்றும் காலாவதியான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, கீரப்பாளையம், புவனகிரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அருண்மொழி, குணசேகரன் ஆகியோர் நேற்று காலை சிதம்பரம் நகரில் உள்ள பால் பாக்கெட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

சபாநாயகர் தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில், அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கடைகளுக்குள் சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து தயாரிப்பு தேதியை சரி பார்த்தனர். மேலும் காலாவதி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்தினார்கள். குளிர்சாதனபெட்டி சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா பால் மொத்த விற்பனை கடைகளில் இருந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்வதற்காக சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு
அனுப்பி வைத்தார்.

பரிசோதனையில் தரமில்லாத பால் என கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும், இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிதம்பரத்தில் நேற்று காலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மொத்த பால் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட விவரம் மற்ற பால் கடைக்காரர்களுக்கு தெரியவந்தது. இதனால் சில கடைக்காரர்கள் ஏதாவது ஒரு குறையில் சிக்கி விடுவோமோ என்று பயந்து கடையை அடைத்து விட்டுச் சென்றனர். வியாபாரிகளின் இந்த செயலை கண்டு நொந்து போன அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...